மதுரையில் அத்துமீறி கஞ்சா விற்பனை.. சிசிடிவிக்களை உடைத்து காவல்துறைக்கு சவாலை
மதுரையில் அத்துமீறி கஞ்சா விற்பனை.. சிசிடிவிக்களை உடைத்து காவல்துறைக்கு சவாலை ஏற்படுத்தும் இளைஞர்கள் !
மதுரை ஆனையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்குள் அத்துமீறி புகுந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள்.
கஞ்சா விற்பனையை தடுக்க வைத்த சிசிடிவிக்களை உடைத்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட கஞ்சா போதை இளைஞர்கள் - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி- பெண்கள் அச்சம், காவல்துறை அலட்சியம்.
மதுரையில் கஞ்சா விற்பனைமதுரை மாநகர் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பதற்காக வெளிப்பகுதிகளில் இருந்து கஞ்சா விற்பனை செய்யும் நபர் சிலர் முகாமிற்கு வருவதாகவும், இதனை தடுப்பதற்காக முகாம் மக்கள் இணைந்து சொந்த செலவில் பொது இடத்தில் வைத்திருந்த 5 கண்காணிப்பு சிசிடிவி கேமிராக்களையும், மின் விளக்குகளையும் கஞ்சா போதை கும்பலானது அடித்து கல்வீசி எறிந்து உடைத்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில் பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை செய்வது, கேமிராக்களை உடைப்பது போன்ற. காட்சிகள் பதிவாகியுள்ளன. இதேபோன்று இரு நாட்களுக்கு முன்பு முகாமிற்குள் உள்ள மருத்துவமனையில் அமர்ந்து கஞ்சா, மதுபோதையை பயன்படுத்தி போதையில் மருத்துவமனை சுற்றுசுவரை உடைத்துள்ளனர். கஞ்சா விற்பனை செய்வதும், சிசிடிவி கேமிராக்களை உடைத்தது தொடர்பாக ஆதாரங்களுடன் கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்க தயக்கம் காட்டுவதாக என முகாம் வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெண்கள், குழந்தைகள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.கஞ்சா விற்பனை பகுதியாக முகாமை மாற்றும் முயற்சிக்கும் இளைஞர்களை கைது செய்து கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கஞ்சா கும்பலின் அட்ராசிட்டியால் முகாமில் உள்ள இலங்கை தமிழர் பெண்கள், குழந்தைகள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.