📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 02, 2026 11:03 PM

மதுராந்தகத்தில் டிராக்டர் ஓட்டி ஓட்டு சேகரித்தார் முதல்வர் விஜய்

மதுராந்தகத்தில் டிராக்டர் ஓட்டி ஓட்டு சேகரித்தார் முதல்வர் விஜய்

மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் ரோடு ஷோ நடத்தியும், டிராக்டர் ஓட்டியும் பிரசாரம் செய்தார்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வரும் அக்டோபர் 4ம் தேதி மாலை, பிரசாரம் நிறைவடைகிறது. பல்வேறு கட்சி தலைவர்களும் தொகுதிகளில் முகாமிட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் விஜய், இன்று (அக் 02) மதுராந்தகம் தொகுதியில், 'ரோடு ஷோ' வாயிலாக, ஓட்டு சேகரித்தார். மாமண்டூர் பகுதியில் ரோடு ஷோ மேற்கொண்ட முதல்வர் விஜய்க்கு தொண்டர் வழங்க முயன்ற முருகர் சிலை நெரிசலில் கீழே விழுந்தது.

வாகனத்தை நிறுத்தி மீண்டும் அன்போடு முதல்வர் விஜய் பெற்றுக் கொண்டார். சாலையின் இருபுறமும் திரண்ட தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்;

பிறகு தெருத் தெருவாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட விஜய், விவசாயிகளை நேரில் சந்தித்து ஓட்டு சேகரித்தார். பிறகு தேநீர் கடையில் டீ அருந்தியபடி பிரசாரம் செய்த அவர், டிராக்டர் ஓட்டியும் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

வரும் அக் 4ம் தேதி காலை 11:00 மணி முதல், தாராபுரம் நகர பகுதியில், 'ரோடு ஷோ' வாயிலாக, முதல்வர் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்