MISA வரலாறு நாடறியும்… வரலாறு ஒருபோதும் மறக்காது; மறுக்காது; மறைக்காது : தமிழச்சி தங்கபாண்டியன் திமுக எம்.பி
MISA வரலாறு நாடறியும்… வரலாறு ஒருபோதும் மறக்காது; மறுக்காது; மறைக்காது : தமிழச்சி தங்கபாண்டியன் திமுக எம்.பி
சென்னை: சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், சட்டம்–ஒழுங்கு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்து, எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு ஆதாரத்தோடு பதிலளித்து, காவல்துறை நிர்வாகம் - காவல்துறையினருக்கு ஆற்றப்போகும் புதிய திட்டங்களை எடுத்துரைத்து, மக்கள் பணியாற்றிட வேண்டிய இடத்தில், முதலமைச்சர் வெற்று அரசியல் மேடை போல் பேசியிருப்பது வருந்தத்தக்கது.
ஜனநாயகத்தை காப்பாற்ற MISA-வில் ஆயிரக்க்கணக்கான திமுக - தோழமை இயக்கத்தினர் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் எங்கே இருக்கின்றார்கள், எப்படி இருக்கின்றார்கள், உயிரோடுதான் இருக்கின்றார்களா? என்பது கூட தெரியாமல், பதைபதைப்போடும் தவிப்போடும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், நாள் கணக்கில் குடும்பம் குடும்பமாக காத்துக் கிடந்த வரலாறு , நாடறியும்.
ஜனநாயகத்திற்காக சிறை சென்று அடக்குமுறையை, அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்ட வரலாறு அது. மரியாதைக்குரிய தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெற்றிருப்பது வெறும் தழும்பல்ல; ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில், அவர் ஏற்றுக்கொண்ட வலியின் வீர அடையாளம் ; ... தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே !' என்ற புறநானூற்றுத் தாயின் வீரவரிகளுக்கு, வாழும் இலக்கணமான வரலாறு. அந்த வீரவரலாற்றைக் கேலி செய்வது, ஜனநாயகம் காக்கப் போராடிய ஒரு தலைமுறையின் தியாகத்தையே கேலி செய்வதாகும்.
MISA வரலாறு நாடறியும்… வரலாறு ஒருபோதும் மறக்காது; மறுக்காது; மறைக்காது என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.