மாநில நெடுஞ்சாலை பெயர் பலகையில் ஹிந்து எழுத்துக்கள்
துாத்துக்குடி: மாநில நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையில், ஊர்களின் பெயர் தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தியிலும் எழுதப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை எஸ்.ஹெச் 93 சார்பில் புதிதாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழிகாட்டி பலகை மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிறுவப்பட்டது.
அந்த பலகையில், திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, துாத்துக்குடி, திருச்செந்துார் ஆகிய ஊர்களுக்கு செல்வது தொடர்பான வழிகாட்டப்பட்டு, தொலைவு விபரமும் எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை அறிவிப்பு பலகைகளில், ஊர்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த பலகையில் ஊர்களின் பெயர்களை ஹிந்தியிலும் பெரிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை எழுதும்போது ஆங்கிலத்திற்கு பதிலாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, சமீபத்தில் அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையில் ஹிந்தியில் ஊர் பெயர்கள் இருந்ததால் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.