📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 02, 2026 11:03 AM

ஆசிய விளையாட்டு போட்டி; வில்வித்தையில் தங்கம் வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்

ஆசிய விளையாட்டு போட்டி; வில்வித்தையில் தங்கம் வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்

டோக்கியோ: ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் அங்கிதா, அகிர்தி, குக்கும் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. இன்று (அக் 02) வில்வித்தை இறுதிப்போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி அங்கிதா, அகிர்தி, குக்கும் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் வென்றுள்ளது. வில்வித்தை பிரிவில் மட்டும் இந்தியா இதுவரை 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

மேலும் ஒரு வெள்ளி!

வில்வித்தை ரீகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது; இறுதிப்போட்டியில் இந்தியாவை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி சீனா தங்கம் வென்றது. தீராஜ், கும்கும் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.

மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா, சீன வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார்

பதக்கப்பட்டியல்

இந்தியா இதுவரை 70 பதக்கங்களை வென்று பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது.