உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பு சேர்க்கை: மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை: உடனே விண்ணப்பிங்க
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காகத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கல்வி உதவித்தொகையுடன் கூடிய தமிழ் முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் இந்த படிப்புகளுக்குத் தகுதியான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பின்வரும் படிப்புகளுக்கு நடைபெறுகிறது:
*ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு (Integrated M.A. Tamil)
*இரண்டு ஆண்டு முதுகலை தமிழ் பட்டப்படிப்பு (M.A. Tamil)
படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியின் (தேர்வின்) அடிப்படையில் தேர்வு செய்யப்படும் 15 மாணவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் மாதம் ரூ. 2,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே கட்டணமில்லா தங்கும் விடுதி மற்றும் உணவு வசதி செய்து தரப்படும்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், சேர்க்கைக்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ulakaththamizh.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அலுவலகத்திற்கு நேரில் சென்றும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், இறுதியாகப் படித்த கல்விச்சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட (Attested) நகல்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர் (கூ.பொ.),உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,இரண்டாம் முதன்மை சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் (CIT Campus),தரமணி, சென்னை - 600 113.தொலைபேசி எண்: 044 - 2254 2992
விண்ணப்பிக்கக் கடைசி நாட்கள்:
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை படிப்பு: ஜூன் 15, 2026
முதுகலை தமிழ் படிப்பு: ஜூன் 30, 2026
கூடுதல் விவரங்கள் மற்றும் நிபந்தனைகளை அறிய நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.