📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 04, 2026 06:01 AM

கோபத்துல ஃபோஸ்டர் விட்டாங்க!.. படமே வராது!.. தமிழ் முருகன் உருவான கதை!…

கோபத்துல ஃபோஸ்டர் விட்டாங்க!.. படமே வராது!.. தமிழ் முருகன் உருவான கதை!…

கோபத்துல ஃபோஸ்டர் விட்டாங்க!.. படமே வராது!.. தமிழ் முருகன் உருவான கதை!…

தனுஷ் – வெற்றிமாறன் இணைந்து வெளியிட்ட தமிழ் முருகன் தொடர்பான அப்டேட்…

சில நாட்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தமிழ் முருகன் என்கிற படத்டில் நடிப்பதாக அறிவிப்பும், போஸ்டரும் வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி.. அந்த படம் தற்போது வரை டேக் ஆப் ஆகவில்லை.. வெற்றிமாறன் அரசன், ராஜன் வகையறா ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்..

தனுஷ் ஓம் படத்தை முடித்துவிட்டு அடுத்த தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பின் தொடர்ந்து வேறு இயக்குனர்களின் படங்களில் அவர் நடிக்கவிருக்கிறார். எனவே தமிழ் முருகன் படம் எப்போது வெளிவரும் என்கிற எதிர்பார்ப்பு சிலரிடம் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் பலரும் அப்படி அறிவிப்பு வெளியானதையே மறந்து விட்டார்கள்..

இந்நிலையில்தான், இந்த படம் வெளியே வராது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.. அதாவது சில நாட்களுக்கு முன்பு தெலுங்கில் திரி விக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் God of War என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. அந்த படத்தின் போஸ்டரில் முருகன் வட மாநிலத்தில் பிறந்தவன் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது வெற்றிமாறனையும் தனுசையும் கோபப்படுத்தியதால்தான் இரண்டு பேரும் சேர்ந்து பேசி ‘தமிழ் முருகன்’ என்கிற தலைப்பில் ஒரு புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த படம் உருவாக வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. தமிழ் முருகன் படம் 300 கோடி பட்ஜெட் என சொல்லப்படுகிறது.. ஆனால் ‘தமிழ் முருகன்’ என்கிற தலைப்பை வைத்துக்கொண்டு அந்த படத்தை ஹிந்தியிலும், தெலுங்கிலும் டப் செய்து வெளியிட முடியாது.. மேலும், ஓடிடி நிறுவனங்களும் இந்த படத்தை வாங்காது. தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் மட்டுமே இந்த படத்தை வெளியிட்டு 300 கோடிக்கு மேல் வசூலையும் பெற முடியாது. எனவே இந்த படம் டேக் ஆப் ஆக வாய்ப்பு இல்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்..

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]