கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை; மருத்துவமனை வெளியிட்ட புதிய தகவல்
சென்னை: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக இருப்பதாக பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவாக இருப்பவர் வி.எஸ்.பாபு. இவருக்கு செப்.9ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 13 நாட்களாக அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வி.எஸ். பாபுவின் உடல்நிலை பற்றிய விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அதிகாரப்பூர்வ அறிக்கைகளாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் அவரின் உடல்நிலை பற்றிய அறிக்கை ஒன்றை இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
வி,எஸ், பாபுவின் உடல்நிலை சீராக இருக்கிறது. இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.