📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 04, 2026 05:00 PM

கன்ஃபஷன் அறையில் பிக் பாஸுடன் பேச ஆசையா மக்களே?: உங்கள் ஊர் தேடி வரும் வாய்ப்பு

கன்ஃபஷன் அறையில் பிக் பாஸுடன் பேச ஆசையா மக்களே?: உங்கள் ஊர் தேடி வரும் வாய்ப்பு

பிக் பாஸ் பார்வையாளர்கள்: பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கி 10 சீசன்களானதை ஸ்பெஷலாக கொண்டாடமுடிவு செய்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக தான் பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சியை நடத்தி 50 பேரில் மூன்று பேரை தேர்வு செய்திருக்கிறார்கள். தேர்வான மூன்று பேரும் காமன்மேன் இல்லையே என்று மக்கள் குமுறியது பிக் பாஸுக்கு கேட்டுவிட்டது.இதையடுத்து முனியம்மாவுக்கு பதில் ஆஷாவை பிக் பாஸ் 10 போட்டியாளராக்கியிருக்கிறார்கள். காமன்மேன் காமன்மேன் என்று சொல்லிவிட்டு ஏற்கனவே பிரபலமாக உள்ள ஆட்களை தேர்வு செய்திருக்கிறீர்களே என்றார்கள் சாதாரண மக்கள். இந்நிலையில் அவர்களை கன்ஃபஷன் ரூமுக்கு அழைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து ஒரு ஐடியா செய்திருக்கிறார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.கன்ஃபஷன் பண்றீங்களா?: அதாவது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கன்ஃபஷன் அறை போன்றே ஒரு வேனில் வடிவமைத்து அதை சென்னை, வேலூர், சேலம், மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த வேனை பார்த்தால் நிறுத்தி கன்ஃபஷன் அறையில் அமர்ந்து மனதில் பட்டதை பிக் பாஸிடம் பேசலாம் மக்களே.பிக் பாஸ் ஷோ அனுபவத்தை உங்கள் ஊரில் இருந்தே உணர இப்படியொரு புது முயற்சி செய்திருக்கிறார்கள். அதனால் முதல் சீசனில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் மனதில் உள்ளதை பிக் பாஸிடம் தாராளமாக சொல்லலாம். பிக் பாஸ் வீட்டை 9 சீசன்களாக டிவியில் பார்த்த மக்கள் தற்போது தங்களின் ஊரிலேயே கன்ஃபஷன் அறைக்குள் சென்று அந்த அனுபவம் எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.ஜாய், குரேஷி: இந்த சீசனில் பிக் பாஸ் தி காமன்மேனில் தேர்வு செய்யப்பட்ட 3 பேர் தவிர்த்து 20 பிரபலங்களை போட்டியாளர்களாக தேர்வு செய்திருக்கிறார்கள். அதில் விஜய் டிவி பிரபலங்களும் அடக்கம். கூமாப்பட்டி தங்கபாண்டியை பிக் பாஸ் 9 வீட்டில் பார்க்க முடியும் என்ற கூறப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. ஆனால் இந்த சீசனிலும் அவரை பார்க்க வாய்ப்பு இல்லை.கூமாப்பட்டிக்காரர் ஜெர்மனி, பிரான்ஸ் என ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் தேவயாணியின் மகள் இனியாவையும் பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் பார்க்க முடியாது என்று தெரிய வந்திருக்கிறது.இந்த சீசனில் குக் வித் கோமாளி புகழ் குரேஷி, அதே நிகழ்ச்சியின் நடுவரான மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஜாய் கிரிசில்டா கலந்து கொள்கிறார்களாம் என பேச்சாக உள்ளது. அந்த இரண்டு பேரும் ஒரே வீட்டில் தங்கினால் சண்டை வருமே. மாதம்பட்டிக்கு ஆதரவாக ஜாய் கிரிசில்டாவை கலாய்த்து வீடியோ போட்டவராச்சே குரேஷ். நீங்க பெரிய ஆளு பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்குக் வித் கோமாளி டாலி, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ராஜ்குமார், பிரபல விமர்சகர் ஒருவரையும் தேர்வு செய்திருக்கிறார்களாம். இதற்கிடையே கடந்த சீசனை போன்றே இந்த சீசனிலும் சாண்டி மாஸ்டர் மச்சினி பெயர் அடிபடுகிறது. சிந்தியா வருவாரா இல்லை இதுவும் வதந்தியா என்பதை தெரிந்து கொள்ள செப்டம்பர் 6ம் தேதி வரை காத்திருக்கவும்.