📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 05, 2026 05:01 PM

Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை

Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை

Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

கார்த்திகை தீபம் சீரியலில் கற்பகத்தை கொலை செய்ய சிவனாண்டி - சந்திரகலா சதி செய்த நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். சனிக்கிழமை எபிசோடில் கற்பகம் என்ற பெண் ராஜசேதுபதிக்கு எதிராக சாட்சி சொன்ன நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்:

அதாவது, பஞ்சாயத்தில் ராஜா சேதுபதி தான் சாமுண்டீஸ்வரி அப்பாவின் மரணத்திற்கு காரணம் என்ற முடிவுக்கு வர வீட்டில் ராஜ ராஜனுக்கும் சாமுண்டீஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.

மறுபக்கம் சந்திரகலா சிவனாண்டியை சந்திக்க, அந்த கற்பகம் ரொம்ப பயத்தில் இருக்கா.. அவ உண்மையை சொல்லிட்டா அவ்வளவுதான் என்று சொல்ல அவளை கொன்றுவிடலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர்.

உண்மையை ஒப்புக்கொண்ட முத்துவேல்:

பிறகு முத்துவேல் கற்பகம் வீட்டிற்கு கிளம்பி செல்ல, மாறுவேடத்தில் வந்த மயில்வாகனம் முத்து வேலை கடத்தி அடித்து விசாரிக்க கற்பகத்தை பொய் சொல்ல வைத்தது நாங்கள் தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறான்.

அதே நேரத்தில் சிவனாண்டி கற்பகம் வீட்டிற்கு சென்று அவளை கத்தியால் குத்த இந்த காட்சிகள் அங்கு அருகில் திருமண போட்டோ நடத்திக் கொண்டிருந்த கேமராவில் பதிவாகிறது.

ரத்த காயத்துடன் அந்த கற்பகம் என்ற பெண்மணி ஓடிவந்து கார்த்திக் வீட்டு கதவைத் தட்ட கார்த்தி கதவை திறக்கும் சமயத்தில் வெளியில் யாரும் இல்லாமல் இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி