📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 25, 2026 12:04 PM

காலை உணவுத் திட்டம்: ஆசிரியர்கள் ருசித்து பார்த்த பிறகே மாணவர்களுக்கு பரிமாற வேண்டும்

காலை உணவுத் திட்டம்: ஆசிரியர்கள் ருசித்து பார்த்த பிறகே மாணவர்களுக்கு பரிமாற வேண்டும்

காலை உணவுத் திட்டம்: ஆசிரியர்கள் ருசித்து பார்த்த பிறகே மாணவர்களுக்கு பரிமாற வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: காலை உணவை ஆசிரியர்களே ருசித்து பார்த்த பிறகே மாணவர்களுக்கு பரிமாற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்வதோடு, கல்விச் செயல்பாட்டையும் மேம்படுத்தும் நோக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இத்திட்டம் முதலில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க சூழலில் உணவின் தரம் மற்றும் உடல்நலப் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்திப் பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சமாக, சமைக்கப்பட்ட காலை உணவை மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன்பாக ஆசிரியர்கள் அதை ருசித்து தரத்தை உறுதி செய்ய வேண்டும். உணவு சரியான வெப்பநிலையில், சுவையாகவும், ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் இருப்பதை ஆசிரியர்கள் நேரடியாக சரிபார்த்த பின்னரே மாணவர்களுக்கு பரிமாற வேண்டும். இதன் மூலம் எதிர்பாராத விபரீதங்கள் தடுக்கப்படும். உணவுத் தரத்தில் எந்தவித சமரசமும் அனுமதிக்கப்படாது என்பதை பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.