📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 25, 2026 08:03 PM

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 4 பெண் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு!

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 4 பெண் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு!

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 4 பெண் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு! - யார் அவர்கள்?

இந்தச் சிறப்பு புலனாய்வுக் குழுவில் 4 பெண் அதிகாரிகள் இடம் பெற்றிருக்கின்றனர்.

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்நிலையில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கை விசாரிக்க 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாலியல் வழக்கை விசாரிக்க முழுமுழுக்க பெண் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை டிஜிபி மகேஷ்குமார் அமைத்திருக்கிறார்.

நேற்று காவல் அதிகாரிகள் 3 பேர் மாற்றப்பட்ட நிலையில் இன்று சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவில் 4 பெண் அதிகாரிகள் இடம் பெற்றிருக்கின்றனர்.

திருமதி. P.C. தேன்மொழி, IPS, கூடுதல் காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு (CCB), பெருநகர சென்னை காவல், சென்னை.

திருமதி. திஷா மிட்டல், IPS, இணை காவல் ஆணையர், சட்டம் & ஒழுங்கு (மேற்கு), பெருநகர சென்னை காவல், சென்னை.

திருமதி. J. முத்தரசி, IPS, காவல் கண்காணிப்பாளர் / ஊடகத் தொடர்பு அலுவலர், DGP/HoPF அலுவலகம், தமிழ்நாடு.

திருமதி. V.V. கீதாஞ்சலி, துணை காவல் ஆணையர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு, பெருநகர சென்னை காவல், சென்னை.

இந்தச் சிறப்பு புலனாய்வுக் குழுவானது சென்னை பெருநகர காவல் ஆணையரின் மேற்பார்வையின் கீழ் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.