📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 25, 2026 09:03 PM

Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ்

Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ்

Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!

Aadhav Arjuna Speech Madurantakam: தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கி எடப்பாடியில் வெற்றி பெற்றவர் பழனிசாமி - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஜெம் வீரமணி மீதான வழக்கை திமுக ஆட்சியில் முடிக்கச் சொன்னது யார்? என்று மதுராந்தகம் பிரச்சாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆதரித்து முதலமைச்சர் விஜய் மதுராந்தகத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரதை முதலமைச்சர் விஜய் தொடங்கினார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆனந்த வரவேற்புரை ஆற்றினார். 1947இல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்றால் 2026இல் தான் தமிழ்நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்றும் முதல்வர் விஜயின் பாதம் பட்ட மதுராந்தகம் தொகுதி இனி அவருடைய கோட்டையாக மாறும் என்றும் மதுராந்தகத்தில் மீண்டும் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றும் அமைச்சர் ஆனந்த் பேசினார். முன்னதாக, முதல்வர் விஜய்க்கு வேட்பாளர் மரகதம் குமரவேல் வெள்ளி வேல் பரிசளித்தார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்தார். திமுக தலைவர், பொதுச் செயலர், பொருளாளரின் மகன் என தோல்வியை சந்தித்தார்கள் என்றும் முதல்வர் விஜய் 12 இடங்களில் தான் பேசினார், திமுகவின் 15 அமைச்சர்கள் அவுட் ஆனார்கள் என்றும் கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எண்ணம் கூட இல்லை என்றும் சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட தவெகதான், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும் என்றும் பேசினார்.

வீரமணி மீதான வழக்கு

2025ஆம் ஆண்டு அக்டோபரில் வீரமணி மீது திமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டதாகவும், போக்சோ வழக்கு குறித்து நானும், நிர்மல்குமாரும் பேச தடை விதிக்க வேண்டும் என்கிறது என்றும் திமுக வரலாற்றிலேயே முதல்முறையாக ஏடிஜிபி மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்ததாகவும் வீரமணி மீதான வழக்கை திமுக ஆட்சியில் முடிக்கச் சொன்னது யார்? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், வீரமணி மீதான வழக்கை முடிக்க ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரை பரிமாற்றம் செய்ததாகவும் கூறினார்.

விலைக்கு வாங்கியவர் இபிஎஸ்

தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கி எடப்பாடியில் வெற்றி பெற்றவர் பழனிசாமி என்றும் காணாமல் போன தவெக வேட்பாளர் அருண் குமார், பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்க்கப்பட்டார் என்றும் பேசிய ஆதவ் ஆர்ஜுனா, மதுராந்தகம் தொகுதியில் தவெக பெறும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வெற்றியாக மாற வேண்டும் என்றும் கூறினார்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி