📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 14, 2026 07:40 AM

இந்தியாவை சீண்டிப் பார்க்க நினைத்து அவமானப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி.. என்ன நடந்தது?

இந்தியாவை சீண்டிப் பார்க்க நினைத்து அவமானப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி.. என்ன நடந்தது?

இந்தியாவை சீண்டிப் பார்க்க நினைத்து அவமானப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி.. என்ன நடந்தது?

துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி வென்றால் தன்னிடம் இருந்து கோப்பையை வாங்காது என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், இந்தியாவை வேண்டுமென்றே சீண்டிப் பார்ப்பதற்காகவே பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி பரிசளிப்பு மேடைக்கு வந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஒருவேளை இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றால், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மாட்டோம் என பிசிசிஐ ஏற்கனவே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளிடம் உறுதியாக தெரிவித்திருந்தது.

இந்த விஷயம் முன்கூட்டியே தெரிந்திருந்தும், தேவையில்லாத சர்ச்சையைத் தவிர்க்க நடுநிலையான வேறு ஒரு அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைக்காமல், தனது பிடிவாதத்தால் மோசின் நக்வி நேராக மேடைக்கு வந்தார். இதனால் இந்திய வீராங்கனைகள் பரிசளிப்பு மேடைப் பக்கமே வராமல் அவரை முற்றிலுமாகப் புறக்கணித்துத் தக்க பதிலடி கொடுத்தனர்.

சுமார் 40 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய அந்த விழாவில், இலங்கை அணிக்கு 2-வது இடத்திற்கான காசோலையை மட்டும் வழங்கிவிட்டு மோசின் நக்வி மேடையை விட்டு வெளியேறினார். இந்திய வீராங்கனைகள் வராததால் கோப்பையை வழங்க முடியாமல் அவர் அவமானத்துடன் திரும்பினார்.

முன்னதாக 2025 ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் அணியும் இதே போல மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்தது. ஆனால், அப்போது மோசின் நக்வி வேறு ஒருவர் மூலம் கோப்பையை வழங்க ஒப்புக் கொள்ளாமல் அதை தன்னுடன் எடுத்துச் சென்றார். அதே போல இப்போதும் இந்திய மகளிர் அணி வென்ற ஆசிய கோப்பையை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்துப் பேசிய இந்திய தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார், "பிசிசிஐ எடுத்த இந்த உறுதியான நிலைப்பாட்டுடன் நாங்கள் நிற்கிறோம். மைதானத்தின் பெரிய திரையிலேயே 'இந்தியா தான் சாம்பியன்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் சாம்பியன் பட்டம் வென்றுவிட்டோம், அதுவே எங்களுக்குப் போதும். கோப்பை இல்லாவிட்டாலும் நாங்கள் வெற்றியாளர்கள் தான்" என்று பெருமிதத்துடன் கூறினார்.