தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு; தகுதி, தேர்வு முறை இதுதான்
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை, நீலகிரி ஆகிய இடங்களில் மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.05.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: MBA in Marketing Management / Cooperative Management / Agri Business Management / Rural Development Management படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முதல் எம்.பி.ஏ வரையிலான படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.acstitnsc.in என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2026
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.