📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 23, 2026 11:02 AM

IND vs IRE: சென்னையிலிருந்து அயர்லாந்துக்கு புறப்பட்ட இந்திய அணி.. சாதிப்பாரா வைபவ் சூர்யவன்ஷி

IND vs IRE: சென்னையிலிருந்து அயர்லாந்துக்கு புறப்பட்ட இந்திய அணி.. சாதிப்பாரா வைபவ் சூர்யவன்ஷி

IND vs IRE: சென்னையிலிருந்து அயர்லாந்துக்கு புறப்பட்ட இந்திய அணி.. சாதிப்பாரா வைபவ் சூர்யவன்ஷி

சென்னை: இந்தியா தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருடன் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டனர். அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி சென்னையில் நடந்தது. இதனையடுத்து 2 நாட்கள் சென்னையிலேயே இந்திய அணி வீரர்கள் தங்கி இருந்தனர்.

அதே சமயம், இலங்கை ஏ அணிக்கு எதிராக விளையாடிய இந்திய ஏ அணி வீரர்கள் திலக் வர்மா, வைபவ் சூர்யவன்ஷியும் முத்தரப்பு இறுதிப் போட்டி முடிந்த பிறகு நேரடியாக கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். இந்த நிலையில் காடில 8 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு தனி பேருந்து மூலம் இந்திய அணி வீரர்கள் வந்து இறங்கினர்.

இந்தியாவின் சார்பில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் மிக இளைய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள 15 வயதே ஆன இளம் வீரன் வைபவ் சூர்யவன்ஷி மீதே அனைவரின் கவனமும் இருந்தது. சூர்யகுமார் யாதவிடம் இருந்து புதிய டி20 கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் சவாலாக இத்தொடர் அமையவுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக பெல்ஃபாஸ்டில் நிலவி வரும் வன்முறைகள் மற்றும் பதற்றம் காரணமாக இந்த சுற்றுப்பயணம் தற்காலிகமாக கேள்விக்குறியானது. எனினும், இந்த தொடரின் இரண்டு போட்டிகளும் பெல்ஃபாஸ்டில் உள்ள ஸ்டோர்மாண்ட் கிரிக்கெட் மைதானத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கிரிக்கெட் அயர்லாந்து வாரியம் உறுதி அளித்துள்ளது.

இது குறித்து அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "தற்போது பதற்றம் நிலவி வரும் பகுதிகளில் உள்ள சூழ்நிலைகளை கிரிக்கெட் அயர்லாந்து வாரியம் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஐரிஷ் சீனியர் கோப்பை மற்றும் தேசிய கோப்பை போட்டிகள் குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் உரிய முடிவு எடுக்கப்படும்.

நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாகாண சங்கங்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். வீரர்கள், பயிற்சியாளர்கள், போட்டி நடுவர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பிற்கே எங்களது முக்கிய முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

இந்தியா vs அயர்லாந்து 2026 - டி20 தொடர் அட்டவணை

முதல் டி20: இந்தியா vs அயர்லாந்து - ஜூன் 26, உள்ளூர் நேரம் மதியம் 3:00 மணி (ஸ்டோர்மாண்ட் கிரிக்கெட் மைதானம், பெல்ஃபாஸ்ட்)

2வது டி20: இந்தியா vs அயர்லாந்து - ஜூன் 28, உள்ளூர் நேரம் மதியம் 3:00 மணி (ஸ்டோர்மாண்ட் கிரிக்கெட் மைதானம், பெல்ஃபாஸ்ட்)

டி20 தொடருக்கான இந்திய அணி

இந்திய அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி, பிரசித் கிருஷ்ணா.