📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 14, 2026 07:34 PM

IND vs AFG: வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் காயம்.. தொடரை விட்டு வெளியேற வாய்ப்பு

IND vs AFG: வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் காயம்.. தொடரை விட்டு வெளியேற வாய்ப்பு

IND vs AFG: வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் காயம்.. தொடரை விட்டு வெளியேற வாய்ப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி மீண்டும் காயம் அடைந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

35 வயதான வருண் சக்கரவர்த்தி இந்த ஆண்டு பல சரிவுகளை சந்தித்து வருகிறார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிய அளவு வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் இந்தியா கோப்பையை வென்றது.

அதன் பிறகு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அவர் காயத்துடன் விளையாடி இருந்தார். இதனை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் பங்கேற்றபோது மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதிலும் அவர் ஒரு விக்கெட் மட்டும்தான் எடுத்திருந்தார். இதனால் வருண் சக்கரவர்த்தி பெங்களூரில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் தங்கி தன்னுடைய உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவருக்கு இந்திய டி20 அணியில் ஆப்கானிஸ்தான் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. தனது முழு உடல் தகுதியை மீட்ட பிறகு வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டார். டெல்லியில் நடந்த இந்த ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

இந்த நிலையில் இந்த போட்டி முடிவடைந்த பிறகு வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் தொடரை விட்டு விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிசிசிஐ சிறப்பு மையம் மீது தேர்வு குழுவினர் மற்றும் பயிற்சியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

காயம் குணமடைந்து வரும் வீரர்கள் திடீரென்று தொடரின் பாதையிலே மீண்டும் காயம் அடைவது தொடர்கதை ஆகி வருகிறது. இதனால் பிசிசிஐ சிறப்பு மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அந்த மையத்தின் செயல்பாடு குறித்து பிசிசிஐ அண்மையில் ஒரு ஆய்வையும் நடத்தியது.

இந்த தருணத்தில் வீரர்கள் அடிக்கடி காயம் அடைவதால் பிசிசிஐ யின் மருத்துவ குழு உறுப்பினர் அதிரடியாக நீக்கப்பட்டு இருந்தால், ஏற்கனவே பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் அடிக்கடி காயம் அடைந்து வந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் வருண் சக்கரவர்த்தியும் இணைந்திருக்கிறார்.