விஜய் திருச்சி வருகை; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: கு.ப கிருஷ்ணன் பேட்டி
திருச்சி கிழக்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய் தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக திருச்சி வருகிறார்.
இதுகுறித்து திருச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "முதலமைச்சர் ஜோசப் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஜூன் 1 ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சி வரும் அவர், புனித வளனார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
முதலமைச்சர் விஜய் வரும் வழியில் வாகனங்களில் யாரும் அவரை பின் தொடர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.தமிழக முதல்வராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக திருச்சி வரும் முதல்வர் விஜய்யை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள் அதிகளவு திரள்வார்கள் என்பதால் போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்பு முன்னெடுப்புகளை திருச்சி மாவட்ட நிர்வாகமும் மாநகர காவல் துறையும் செய்து வருகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்