📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 15, 2026 11:33 AM

ஈரான் போர்: எண்ணெய்க் கப்பல் வாடகை உயர்வு

ஈரான் போர்: எண்ணெய்க் கப்பல் வாடகை உயர்வு

லண்டன்: ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எண்ணெய் கொண்டுசெல்ல கப்பல்கள் தயங்குவதால், எண்ணெய்க் கப்பல்களின் வாடகை முதன்முறையாக நாளொன்றுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.

பாரசீக வளைகுடாவிலிருந்து சீனாவுக்குக் கச்சா எண்ணெய் கொண்டுசெல்வதற்கான கப்பல் வாடகை ஒரு நாளைக்கு 1.035 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக லண்டனின் ‘பால்டிக் எக்ஸ்சேஞ்’ தரவுகள் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) தெரிவித்தன. ஆபத்தான நீரிணைப் பகுதியைக் கடப்பதைத் தவிர்க்க, ஓமன் வளைகுடா வழியே சீனாவிற்கு எண்ணெய் கொண்டுசெல்லும் கப்பல்களின் வாடகையும் ஒரு நாளைக்கு US$644,000ஆக அதிகரித்துள்ளது.

ஈரான் போர்ச் சூழல், சரக்குக் கப்பல்களின் தட்டுப்பாடு காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் உச்சத்தை எட்டியுள்ளன.

விநியோகச் செலவு அதிகரிப்பால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை மேலும் கூடியுள்ளது.

சிங்கப்பூரில் திங்கட்கிழமை எரிபொருள் விலை லிட்டருக்கு 8 முதல் 12 காசு வரை அதிகரித்தது.

விலையேற்றத்தால் வணிக வாகனங்கள், பேருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படும் டீசல் விலை ஜூன் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக லிட்டருக்கு $4ஐth தாண்டியுள்ளது.

பெரும்பாலான கார்களில் பயன்படுத்தப்படும் 95-ஆக்டேன் பெட்ரோலின் விலையும் உயர்ந்துள்ளது. 98-ஆக்டேன், பிரீமியம் வகை பெட்ரோல் விலைகளும் கூட்டப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை இரவுவரை எஸ்பிசி, சினோபெக் ஆகிய நிறுவனங்கள் விலையேற்றத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

கச்சா எண்ணெய் விலை உயர்வும் கப்பல் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பும் இணைந்து உலகளாவிய பொருளியல் அழுத்தத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளன. அதிவேகமாக உயர்ந்துவரும் கச்சா எண்ணெய் விலையால் உலகளவில் பணவீக்கக் கவலை அதிகரித்துள்ளது.