📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 18, 2026 06:03 PM

‘ஹோம் யோகா’ நிலையம் நிரந்தரமாக மூடப்படுகிறது

‘ஹோம் யோகா’ நிலையம் நிரந்தரமாக மூடப்படுகிறது

சிங்கப்பூரில் செயல்படும் ‘ஹோம் யோகா’ உடற்பயிற்சி நிலையம் 2027ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதியுடன் நிரந்தரமாக மூடப்படுகிறது.

வேலி பாயிண்ட் கடைத்தொகுதி மறுசீரமைக்கப்பட உள்ளதால் அங்குள்ள ‘ஹோம் யோகா’ கிளை மூடப்படுகிறது.

முன்னதாக, ஆர்ச்சர்ட் சென்ட்ரல் கிளையை நவம்பர் 15ஆம் தேதியுடன் மூடப்போவதாக ‘ஹோம் யோகா’ நிறுவனம் ஜூலை 25ஆம் தேதி அறிவித்திருந்தது.

வளாகக் கட்டட நிர்வாகம் மீண்டும் பெற்றுக்கொள்வதால் ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் தனது 14 ஆண்டு காலச் சேவையை முடிவுக்குக் கொண்டுவந்தது ‘ஹோம் யோகா’.

“அதிகரிக்கும் செலவு மற்றும் புதிய இடத்தைக் கண்டுபிடிப்பதில் உள்ள சவால்கள் காரணமாக நிலையத்தை முழுமையாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று ‘ஹோம் யோகா’ தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டது.

“வாடிக்கையாளர்கள் தாங்கள் முன்பதிவு செய்த வகுப்புகளை இறுதி நாள் வரை பயன்படுத்தலாம். முன்னதாகவே சேவையிலிருந்து வெளியேற விரும்புவோர் மின்னஞ்சல் வாயிலாகக் கோரிக்கை அனுப்பலாம். அவர்களது கட்டணமும் திருப்பித் தரப்படும்,” என்று அது கூறியது.

‘ஹோம் யோகா’ மூடப்படுவதை அறிந்த வாடிக்கையாளர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். தங்களது உடற்பயிற்சிப் பயணத்தில் ‘ஹோம் யோகா’வின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது என்று அவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.