📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 23, 2026 04:03 PM

எம்எல்ஏக்களுக்கு உரிய மரியாதை தாருங்கள்

எம்எல்ஏக்களுக்கு உரிய மரியாதை தாருங்கள்

எம்எல்ஏக்களுக்கு உரிய மரியாதை தாருங்கள் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

சென்னை திருவிக பள்ளியில் மரபு மீறப்பட்டதாக எம்எல்ஏ பல்லவி மனு அளித்துள்ளார். திருவிக பள்ளியில் நடந்தது இனி நடைபெறாது என நம்புவதால் அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

அரசு விழாக்களுக்கு எம்எல்ஏக்களுக்கு முறையாக அழைப்பு விடுத்து அதிகாரிகள், ஆட்சியர்கள் மரியாதை தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.