சூர்யா
சென்னை: சூர்யாவும், ஜோதிகாவும் சமீபத்தில் தங்கள்து 20வது வருட திருமண நாளை கோலாகலமாக கொண்டாடினார்கள். வெளிநாட்டில் இருக்கும் சர்ச் ஒன்றில் கிறிஸ்தவ முறைப்படி திருமணமும் செய்துகொண்டார்கள். அதை பார்த்த விஜய் ரசிகர்கள் சிலர் ட்ரிக்கராகி அவர்களை தரக்குறைவாகவும் பேசினார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் இதுகுறித்து பேசியிருக்கிறார்.
சூர்யாவும், ஜோதிகாவும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோதே காதலிக்க தொடங்கிவிட்டார்கள். பல வருடங்கள் காதலித்த அவர்களுக்கு சிவக்குமார் முதலில் பச்சைக்கொடி காட்டவில்லை. ஆனால் இரண்டு பேருமே பிடிவாதமாக இருந்ததால் திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். அந்தத் தம்பதிக்குள் சின்ன சின்ன சண்டை வந்திருக்கும்தான். அவர்கள் அதை பெரிதாக்காமல் ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து சென்று; கோலிவுட்டின் சக்சஸ்ஃபுல் ஜோடியாக வலம் வருகிறார்கள்.
மீண்டும் திருமணம்: திருமணத்துக்கு பின்பும் ஜோதிகா சில வருடங்கள் கழித்து நடிக்க வந்தார். இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸில் செம பிஸியாக இருக்கிறார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சமீபத்தில் அவர்கள் தங்களது 20வது திருமண நாளை கொண்டாடினார்கள். சர்ச் ஒன்றில் கிறிஸ்தவ முறைப்படி திருமணமும் செய்துகொண்டார்கள். அது பார்ப்பதற்கே அவ்வளவு க்யூட்டாக இருந்தது. நரை கூடிய பிறகு காதல் பிறை அழியாது என்பதற்கு சாட்சியாக இருக்கிறார்கள்.
ட்ரிக்கர் ஆன விஜய் ரசிகர்கள்: சூர்யா - ஜோதிகா தொடர்பான அந்த வீடியோவை பெரும்பாலானோர் ரசித்து பார்த்து வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால் விஜய்யின் ரசிகர்களில் சிலரோ, வழக்கம்போல் ட்ரிகர் ஆகி ஜோதிகாவை தரக்குறைவாக விமர்சித்தார்கள். அதுவும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது. மேலும் சிவக்குமார் இதில் கலந்துகொள்ளாதது குறித்தும் சிலர் இஷ்டத்துக்கு பேசினார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் இதுகுறித்து பேசியிருக்கிறார்.
பாண்டியன் பேச்சு: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஜோதிகாவை 25 வருடங்களுக்கு முன்பே மருமகளாக ஏற்க சிவக்குமார் மறுத்துவிட்டார். சூர்யா எப்போதுமே அப்பா பிள்ளை. சூர்யா இவ்வளவு பெரிய இடத்துக்கு வருவார் என்று சிவக்குமாரே நம்பவில்லை. வீட்டில் கலகலவென்று பேசும் ஆள் கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சூர்யாவும், ஜோதிகாவும் தனித்தனியாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்குள் பழக்கம் ஏற்படுத்தி வைத்ததே ராதிகாதான். ஒருகட்டத்தில் பாலாவிடம் சென்று பேசி சிவக்குமாரிடம் சம்மதம் வாங்கினார் சூர்யா.
ஜோதிகா முஸ்லீம் என்பதால் சிவக்குமார் ஏற்றுக்கொள்ளவில்லை. சூர்யாவை இஸ்லாமிய மதத்துக்கு மாற ஜோதிகா குடும்பம் சொன்னது. ஆனால் அதுவும் கடைசிவரை நடக்கவில்லை.விஜய் - அஜித் சந்திப்பு குறித்த விளம்பரங்களை ஓய்ப்பதற்காகத்தான் சூர்யா - ஜோதிகாவின் தேவாலய திருமணத்தை திட்டமிட்டு வைரலாக்கியிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க விளம்பரத்துக்காக மட்டுமே செய்யப்பட்ட திருமணம். அதனால்தான் சிவக்குமார் போகவில்லை. மற்றபடி அதில் எதுவுமே இல்லை. சிவக்குமார், ஜோதிகா, சூர்யா எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்" என்றார்.