📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 20, 2026 05:03 AM

 சட்டம்

 சட்டம்

சென்னை: அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:

தமிழகத்தில் ஒரே நாளில் எட்டு படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அமைதியை சீர்குலைத்து, பதற்றமான சூழலை அதிகரிக்கும் இதுபோன்ற படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் சூழல் உள்ளது.

காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய், சட்டம் - ஒழுங்கை சீர்செய்ய, எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு என்பது எவ்வளவு முக்கியம் என்பது அவருக்கு புரிகிறதா அல்லது புரிந்தும் தனது நிர்வாக திறமையின்மையால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.