📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 07, 2026 08:01 PM

சுறாப் பட காட்சி

சுறாப் பட காட்சி

நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை உடன் முடிகிறது. இந்நிலையில் இன்றைய அவை நடவடிக்கையில், காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.

அப்போது திமுகமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அமலாக்கத்துறை வழக்குகள், மிசா, சர்க்காரியா ஆணையம் உள்ளிட்ட பலவற்றை குறிப்பிட்டு பேசினார்.

திமுக வெளிநடப்பு

இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முதலமைச்சர் விஜய் உரையாற்றும்போதே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். மேலும் அவை நடுவே தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பதிலளிக்க சட்டப்பேரவைத் தலைவர் நேரம் தரவில்லை என வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.,

தவெகவின் நூறு நாள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை ஆதாரத்துடன் தாங்கள் சுட்டிக்காட்டியதாகவும், அதற்குப் பதிலளிக்க முடியாமல் முதலமைச்சர் விஜய் எந்தவித ஆதாரமும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளைத் தங்கள் மீது சுமத்தியுள்ளார் என்றும் கூறினார்.

மேலும் அவை அனைத்தும் வழக்குகள்தான் என்றும், முதலமைச்சர் விஜய், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்குகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் முதலமைச்சர் விஜய் நடித்த சுறா படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார்.