எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் இல்லை; சட்டமன்றத்தில் கூச்சல் ஏன்.? இந்திய கம்யூனிஸ்ட்
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் இல்லை; சட்டமன்றத்தில் கூச்சல் ஏன்.? இந்திய கம்யூனிஸ்ட்
சென்னை: முதல்வர் இன்று தொண்டை கிழிய கத்தி, கத்தி பேசிய பதிலுரைக்கு பிறகு எதிர்கட்சியினர் பேச முதலில் வாய்ப்பளிப்பதாக கூறிய சபாநாயகர், பின்னர் அனுமதி மறுத்தார். இது சோஷியல் மீடியாக்களிலும், நேரலையில் பார்த்து கொண்டிருந்த மக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் இன்றைய சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து தவெக-விற்கு ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் சபாநாயகர் எப்போதும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சட்டமன்றம் என்பது மக்களின் கோரிக்கைகள் பற்றி விவாதித்து அதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கும் இடமாக இருக்க வேண்டும்.
உயிர்புள்ள ஜனநாயகத்திற்கு எதிர்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்கவும், அதற்கு உரிய முறையில் பதிலளிப்பதற்குமான் இடமாகவே சட்டமன்றம் இருக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிப்பதற்கு பதிலாக இன்று வெறும் கூச்சல் மட்டும் தான் சட்டமன்றத்தில் கேட்டது என்று முதல்வர் விஜய்யின் பேச்சை மு.வீரபாண்டியன்கடுமையாக விமர்சித்துள்ளார். வெறும் கூச்சல் மற்றும் வாதம் முறையால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது என்றும் மு.வீரபாண்டியன் சாடி உள்ளார். சட்டமன்ற மரபு, ஜனநாயகத்தை பாதுகாப்பதில் ஆளுங்கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.