சிங்கப்பூர் ஆலயங்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை மகோற்சவம்
சிங்கப்பூர் ஆலயங்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை மகோற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தென் கிழக்கு ஆசியாவின் திருப்பதி - சிங்கப்பூர் ஸ்ரீ வைகுண்டம் என்றழைக்கப்படும் சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் நிரம்பி வழியும் புகழ் பெற வைத்து சிறப்பெய்திய வைகானஸ யஷோபூஷணம் அம்மன்குடி வே. ஸ்ரீ நிவாச பட்டாச்சாரியார் அதே பாணியில் சாங்கி ஸ்ரீ ராமர் கோயிலிலும், பூலோக ஸ்வர்க்கமாம் திருமலை திருப்பதி மலையப்ப சுவாமிக்கு நடைபெறும் அதே ஆகம முறைப்படி வழிபாடுகள் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
19 ஆம் தேதி புரட்டாசி முதல் சனிக்கிழமை ஸ்ரீ ராமர் ஆலயம் பக்தர்கள் வெள்ளம் பொங்கித் ததும்பி பூரணமாய் பொலிய கோலாகலமாக நடைபெற்றது. வைகறையிலேயே சுப்ரபாதம் இப்பகுதி முழுவதும் தெய்வீக சூழலைத் தோற்றுவித்தது தொடர்ந்து தோமா லா, திருமஞ்சனம் , விஸ்வரூப தரிசனம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற பக்தர்களின் ' கோவிந்தா... நாராயணா... மதுசூதனா எனும் முழக்கம் விண்ணைப் பிளந்தது. ஸ்ரீ . ஹனுமன் சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் விஸ்வரூப தரிசனம் மெய்சிலிர்க்க வைத்தது.
சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஆலயம் வலம் வந்து அருள் பாலித்தார். தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோபூஷணம் அம்மன்குடி வெ. ஸ்ரீ நிவாச பட்டாச்சாரியார் புரட்டாசி மகாத்மியம் பற்றி விரிவாக விளக்கினார். அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாணம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார். நிறைவாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தலை வாழை இலை அறுசுவை அன்ன தானம் குறிப்பிடத்தக்கது.
20 ஆம் தேதி மூல நட்சத்திரமாகவும் அமைந்ததால் ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. தென் கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான 21 அடி விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி திருவுருவம் இங்குதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்
- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்