📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 18, 2026 02:03 PM

Chennai Rain : 'வரலாறு காணாத மழை!'

Chennai Rain : 'வரலாறு காணாத மழை!'

Chennai Rain : 'வரலாறு காணாத மழை!' - சென்னையில் அதிக மழை கொட்டித்தீர்த்த டாப் 10 இடங்கள்!

வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தாலும் இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை என மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னதாக கூறியிருந்தார்.

நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக கனமழை பொழிந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையின் கடந்த 24 மணி மழைப்பொழிவு ரிப்போர்ட்டை மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 'சென்னையில் 20 செ.மீக்கும் அதிகமாக அதிகனமழை 6 இடங்களில் பதிவாகியிருக்கிறது. அதேமாதிரி, 11.5 செ.மீக்கும் அதிகமாக மிகக் கனமழை 12 இடங்களில் பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக பாரிஸில் 36.3 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது' எனக் கூறியிருக்கிறார். இது நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு ஆகும்.

மாநகராட்சி ஆணையர் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி சென்னையில் அதிகளவில் மழைப்பொழிவை பெற்றிருக்கும் டாப் 10 இடங்கள் இங்கே.

* Z 05 பாரிஸ் (வார்டு 60) - 36.34 செ.மீ

* Z 01 கத்திவாக்கம் - 34.44 செ.மீ

* Z 12 மீனம் பாக்கம் - 28.58 செ.மீ

* Z 05 சென்னை சென்ட்ரல் - 27.45 செ.மீ

* Z 01 திருவொற்றியூர் - 22.44 செ.மீ

* Z 01 எண்ணூர் (வார்டு 03) - 21.58 செ.மீ

* Z 01 கார்கில் நகர் - 19.24 செ.மீ

* Z 05 செமட்ரி ரோடு (பிரிவு 51) - 17.94 செ.மீ

* Z 10 சைதாப்பேட்டை (வார்டு 139) - 17.02 செ.மீ

* Z 04 தண்டையார்பேட்டை - 16.65 செ.மீ

மழை பாதிப்புகளை பற்றி மக்கள் புகாரளிக்க 1913 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.