📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 15, 2026 05:05 PM

சைம்ஸ், கேபிடல் கெம்பின்ஸ்கி: S$979M சிங்கப்பூர் சொத்து வாங்கும் திட்டம்

சைம்ஸ், கேபிடல் கெம்பின்ஸ்கி: S$979M சிங்கப்பூர் சொத்து வாங்கும் திட்டம்

கோலாலம்பூர்: சிங்கப்பூரின் வணிகச் சொத்துச் சந்தையில் மிகவும் தீவிரமாகச் சொத்துகளை வாங்கிவரும் முக்கிய முதலீட்டாளர்களில் மலேசியப் பெருஞ்செல்வந்தர் லீ யாவ் செங்கும் ஒருவர்.

அவரது முதலீட்டுப் பயணம் அத்துடன் முடிவடைந்துவிடவில்லை. அவர் தலைமையிலான ‘ஐஓஐ புரோப்பர்டீஸ் குழுமம்’ இரு முக்கியச் சொத்துகளை வாங்குவதற்காகப் பிரத்யேகப் பேச்சுவார்த்தையிலும் ஆய்விலும் ஈடுபட்டு வருவதாகத் தலைமை நிர்வாக அதிகாரி லீ, பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

நகரின் மையப்பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னாள் கத்தோலிக்கப் பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் ‘சைம்ஸ்’ சில்லறை வர்த்தகப் பகுதி, அதன் அருகில் உள்ள ‘த கேப்பிடல் கெம்பின்ஸ்கி’ ஹோட்டல் ஆகியவை அவ்விரு சொத்துகளாகும்.

இருப்பினும், பேச்சுவார்த்தைகள் தொடர்வதைச் சுட்டிக்காட்டி, அந்த இரு சொத்துகளின் இறுதி ஒப்பந்த மதிப்பு எவ்வளவு என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

கிட்டத்தட்ட $600 மில்லியனுக்கு விளம்பரப்படுத்தப்பட்ட கெம்பின்ஸ்கி ஹோட்டலை விற்க சிங்கப்பூர் சொத்து மேம்பாட்டாளரான ‘பெரனியல் ஹோல்டிங்ஸ்’ முயன்று வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதியில் ‘சைம்ஸ்’இன் மதிப்பு $379 மில்லியனாகக் கணக்கிடப்பட்டது.