📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 11, 2026 03:04 AM

அடித்து துன்புறுத்தியதாக மனைவி புகார்: துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

அடித்து துன்புறுத்தியதாக மனைவி புகார்: துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

துணை போலீஸ் சூப்பிரண்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந் தவர் ஜாபர் சித்திக் (வயது 34). இவர் ராணிப் பேட்டை மாவட்டம் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டாக கடந்த 2024-ம் ஆண்டு பணியாற்றி னார். அப்போது அரக்கோணம் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் ஷோபனா (30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு, ஜாபர் சித்திக் மற்றும் ஷோபனா தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ஜாபர் சித்திக், ஷோபனாவை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அரக்கோணம் போலீஸ் நிலையத்தில் ஷோபனா புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜாபர் சித்திக் கடந்த ஜூலை மாதம் ராமநாதபு ரம் மாவட்டம் பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

மனைவி புகார்

இதற்கிடையில் கணவர் ஜாபர் சித்திக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டி.ஜி.பி. மகேஷ் அகர்வாலிடம் ஷோபனா புகார் மனு அளித்தார். அதன்பேரில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதை யடுத்து வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஜாபர் சித்திக் மீது வழக்குப்பதிவு செய் தனர்.

இதன்காரணமாக பரமக்குடியில் பணியாற்றி வந்த ஜாபர் சித்திக்கை பணியிடை நீக்கம் செய்து கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து அவரிடம் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் கைது