அரசு பஸ்
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் நே ற்று அதிகாலை, ஆம்னி பஸ் - அரசு பஸ் மோதிய விபத்தில், ஆசிரி யை உட்பட ஆறு பேர் பலியாகினர்; 42 பேர் காயமடைந்தனர்.
மதுரையில் இருந்து நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, 54 பயணியருடன் திருச்சி நோக்கி அரசு பஸ் சென்றது. பஸ்சை, திருச்சி மாவட்ட ம், கீளூரைச் சேர்ந்த ஜோதி, 49, ஓட்டினார்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திற்கு, கே.என்.ஆர்., ஆம்னி பஸ், 45 பயணியருடன் சென்றது. பஸ்சை, கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரேஷ், 40, ஓட்டினார்.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி, வஞ்சி நகரம் அருகே, ஆம்னி பஸ் அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, மீடியனை கடந்து எதிர் திசையில் பாய்ந்தது.
அப் போது, திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதி, மீண்டும் மீடியனை கடந்து பழைய பாதைக்கு திரும்பி, மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள வஞ்சி நகரம் பஸ் நிறுத்தத்தை உடைத்து நி ன்றது.
இதில், அரசு பஸ் கவிழ்ந்தது. ஆம்னி பஸ்சில் பயணித்த, நெல்லை தனியார் பள்ளி ஆசிரியை சிறிய புஷ் பா, 56, ஆபிரகாம், 40, அரசு பஸ்சில் பயணித்த முகமது யாசின், 60, துவரங்குறிச்சி அரசு பள்ளி உ தவி தலைமை ஆசிரியர் திருச்சி ஆனந்தராஜ், 46, திருச்சி ரயில்வே ஒப்பந்த பணியாளர் சூர்யா, 29 , மற்றும் ப ஸ் ஸ்டாப்பில் துாங்கிய வஞ்சி நகரம் பெருமாள், 69, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், படுகாய மடைந்த இரு பஸ்களில் பயணித்த பயணியர், 42 பேர் மீட்கப்பட்டு, மதுரை, மேலுார் மருத்துவமனை களில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்தில், மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, டி.ஐ.ஜி., அபிநவ் குமார், எஸ்.பி., தேவநாதன், இன்ஸ்பெக்டர் லோகநாதன் விசாரித்தனர்.
அதிகாலை நேரத்தில் ஆம்னி பஸ் டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததால், இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என கூற ப்படுகிறது. இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
நிவாரணம் அறிவிப்பு
விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா, மூன்று லட்சம், படுகாயம் அடைந்த ஏழு பேருக்கு தலா, ஒரு லட்சம், லேசான காயம் அடைந்த, 15 பேருக்கு தலா, 50,000 ரூபாய் நிவாரணமாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.