📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 13, 2026 11:00 AM

அரசியலில் தனி வழியை உருவாக்கிய அண்ணாமலை; கோவைக்கு முதல் வருகையால் உற்சாக வரவேற்பு

அரசியலில் தனி வழியை உருவாக்கிய அண்ணாமலை; கோவைக்கு முதல் வருகையால் உற்சாக வரவேற்பு

சென்னை: அரசியல் இயக்கத்தை தொடங்கிய பிறகு முதல்முறையாக இன்று (ஜூன் 13) காலை 7.20 மணிக்கு கோவை வந்த அண்ணாமலைக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக டில்லி சென்ற அண்ணாமலை தமது ராஜினாமா கடிதத்தை தலைமையிடம் அளித்தார். அவரது முடிவை பாஜ ஏற்றுக் கொண்டு, அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது. அதன் பின்னர் தமது விலகல் முடிவை சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிட்ட அண்ணாமலை, இது நம்ம இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாக அறிவித்தார்.

இந்த இயக்கத்தில் இதுவரை 17 லட்சத்து 68 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இந்நிலையில் அரசியல் இயக்கத்தை தொடங்கிய பிறகு முதல்முறையாக இன்று (ஜூன் 13) காலை 7.20 மணிக்கு கோவை வந்த அண்ணாமலைக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சால்வை அணிவித்து, கோஷங்கள் எழுப்பியும் அண்ணாமலையை வரவேற்றனர்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

கோவையில் இன்று (ஜூன் 13) காலை வந்து இறங்கிய அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்