📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 15, 2026 04:33 PM

அஜித்தை வெளுக்கும் ரசிகர்கள்.. செல்ஃபிக்கு இப்படி முறைப்பதா? ஹாமில்டனை விட பெரிய வீரரா நீங்க?

அஜித்தை வெளுக்கும் ரசிகர்கள்.. செல்ஃபிக்கு இப்படி முறைப்பதா? ஹாமில்டனை  விட பெரிய வீரரா நீங்க?

அஜித்தை வெளுக்கும் ரசிகர்கள்.. செல்ஃபிக்கு இப்படி முறைப்பதா? ஹாமில்டனை விட பெரிய வீரரா நீங்க?

லண்டன்: தமிழ் சினிமாவின் உச்ச பச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் தற்போது கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் லண்டனில் நடைபெற்ற சில்வர்ஸ்டோன் கார்பந்தயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்று பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் இந்த கார் பந்தயத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த நடிகர் அஜித் குமார் செய்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அஜித் ஒரு நடிகர் என்பதால் அவரைக் காண பெருமளவு ரசிகர்கள் தினமும் மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

ஆனால் நடிகர் அஜித் டென்ஷன் ஆகி முறைத்து ரசிகர்களை அவமதிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அஜித் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்து திரும்பும் போது ரசிகர் ஒருவர் அவர் வரும் பாதைக்கு முன் நின்று எந்த தொந்தரவும் செய்யாமல் செல்ஃபி எடுக்க முயன்றார்.

ஆனால் அஜித் அதை பார்த்து கடுப்பாகி நின்று அந்த ரசிகரை பார்த்து கோபமாக முறைத்தார். உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரை அப்புறப்படுத்தினர். அஜித்தின் இந்த செயல் தான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தங்களுக்கு பிடித்த நடிகர் கார் ஓட்டுகிறார் என்பதற்காக அந்த விளையாட்டை பற்றி கொஞ்சமும் தெரியாமல் கூட ரசிகர்கள் பெருமளவு அவருக்காக குவிந்து வருகின்றனர்.

அவருடன் ஒரு முறையாவது போட்டோ எடுத்து விட வேண்டும். பேச வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் நடிகர் அஜித் அவர்களை கண்டு கொள்ளாமல் கோபமாக நடத்துவது தொடர்கதை ஆகி வருகிறது. இதனை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் ஏழு முறை ஃபார்முலாவின் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற லீவிஸ் ஹாமில்டன் கூட இது சில்வர் ஸ்டோன் மைதானத்தில் வரும்போது ரசிகர்களுடன் நின்று செல்பி எடுத்துக் கொள்வார் என்றும் ஆனால் லீமான் பந்தயத்தில் 38வது இடம் பிடிக்கும் அஜித் ரசிகர்களுடன் செல்பி எடுக்க கோபப்படுவதாகவும் அஜித்தின் இந்த நடத்தை கண்டிக்கத்தக்கது என்றும் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக உயர்ந்த பின்பு தற்போது எனக்கு ரசிகர்கள் வேண்டாம் என்று கூறும் அஜித் ஆரம்பத்திலே இதை செய்யவில்லை என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர். கார் பந்தயத்தில் 38 வது இடம் அஜித் பிடித்தாலும், அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் நிற்கின்றனர்.

ஆனால் அவர்களை அஜித் மதிப்பதே இல்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. கோடிக்கணக்கில் செலவாகும் இந்த கார்பந்தயத்தில் அஜித் ஈடுபட முடிகிறது என்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் கடந்த 30 ஆண்டுகளாக அவருக்கு வழங்கி வரும் ஆதரவு தான் காரணம் என்றும், இதனை அஜித் மறந்து விட வேண்டாம் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் அஜித்துக்கு சில ஆதரவு கருத்துக்களும் வருகிறது.

மற்ற விளையாட்டு வீரர்கள் தொந்தரவு அடையக்கூடாது என்பதற்காகத்தான் அஜித் இவ்வாறு செய்வதாகவும், வெளிநாட்டில் இவ்வாறு வந்து ரசிகர்கள் கத்துது மூலம் அது நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் என்பதால் அஜித் அதில் கண்ணும் கருத்துமாக இருப்பதாக கூறி வருகின்றனர். இதற்கு பதில் அளித்துள்ள விமர்சகர்கள், இதுவே வெளிநாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் வருகிறார்கள் என்றால் அஜித் அவர்களுக்கு மரியாதை கொடுப்பதாகவும் தமிழ் ரசிகர்கள் வந்தால் மட்டும்தான் அஜித் கோபப்படுவதாகவும் சாடியுள்ளனர்.