📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 02, 2026 02:03 PM

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.760, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.760, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (அக் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 95 ரூபாய் அதிகரித்து 13,775 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், (செப் 30) ஆபரண தங்கம் கிராம், 13,710 ரூபாய்க்கும், சவரன், 1,09,680 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (அக் 01), தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 13,680 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் சரிவடைந்து, 1,09,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 240 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.40 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 95 ரூபாய் அதிகரித்து 13,775 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 245 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.