ஆசிய விளையாட்டில் 10,000 மீ ஓட்டத்தில் 2 பதக்கம் வென்ற ஒரே இந்தியர்.. குல்வீர் வெள்ளி வென்று சாதனை
ஆசிய விளையாட்டில் 10,000 மீ ஓட்டத்தில் 2 பதக்கம் வென்ற ஒரே இந்தியர்.. குல்வீர் வெள்ளி வென்று சாதனை
நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில், ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீரர் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், குல்வீர் சிங் 10,000 மீட்டர் பந்தய தூரத்தை 28:29.38 நிமிடங்களில் கடந்து 2-வது இடத்தைப் பிடித்தார். ஆரம்பம் முதலே முன்னணி வீரர்களுக்கு இணையாக சீரான வேகத்தில் ஓடிய குல்வீர், கடைசி 2,000 மீட்டர் தூரம் மீதமிருந்த போது பதக்கப் போட்டியில் முன்னிலையில் நீடித்தார்.
ஜாகீர் கானை லக்னோ கழற்றிவிட்டது ஏன்? கோயங்கா மீது பாயும் விமர்சனம்.. ஜாஃபர், கைஃப் காரசார கருத்து ஏற்கனவே பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் சீமா குமாரி வெண்கலமும், 4x400 மீட்டர் கலப்பு ரிலேவில் வெள்ளியும் கிடைத்திருந்த நிலையில், குல்வீர் சிங்கின் இந்த வெள்ளிப் பதக்கம் தடகளக் களத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.