📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 15, 2026 03:33 AM

ஆசிய கோப்பை... மறுத்தது ஏன்: பி.சி.சி.ஐ., விளக்கம்

ஆசிய கோப்பை... மறுத்தது ஏன்: பி.சி.சி.ஐ., விளக்கம்

துபாய்: துபாயில் 10வது பெண்கள் ஆசிய கோப்பை 'டி-20' தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதன் பின் பரிசளிப்பு விழா 45 நிமிடம் தாமதமாகத் துவங்கியது. இதில் இலங்கை அணியினர் மட்டும், இரண்டாவது இடத்துக்கான பரிசுகளை பெற்றுக் கொண்டனர்.

ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மொசின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீராங்கனைகள் மறுத்தனர். பின், கோப்பை இல்லாமல் போட்டோ எடுத்துக் கொண்டனர். கடந்த ஆண்டும் இதுபோல, இந்திய ஆண்கள் அணியினர் கோப்பை வாங்க மறுத்தனர்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் தேவஜித் சைக்கியா கூறியது:

ஏ.சி.சி., உறுப்பினர் என்ற முறையில் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றோம். இந்திய பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் ஆனது. ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கும், நமது வீராங்கனைகளுக்கும் கிடைத்த வெற்றி.

மற்றபடி, கோப்பை வழங்கும் விழாவில் இந்திய அணி பங்கேற்காது என்ற முடிவை, ஏற்கனவே ஏ.சி.சி.,க்கு தெரிவித்து விட்டோம். மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப, கோப்பையை பெற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்காது. பி.சி.சி.ஐ.,யின் நிர்வாக ரீதியிலான முடிவை, தொடர்ந்து பின்பற்றுகிறோம். மற்றபடி விளையாட்டுக்கு எதிரான செயல் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

நாங்கள் சாம்பியன்

ஆசிய கோப்பை பைனலில் இலங்கை துவக்க வீராங்கனை இமேஷாவை அவுட்டாக்கினார் இந்தியாவின் கிராந்தி கவுடு. அப்போது தேவையற்ற முறையில் சைகை செய்ததால், கிராந்தி சம்பளத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டது.

மூன்று கோப்பை

ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடரில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் கோப்பை வென்றன. அடுத்து ஆசிய 'டி-20'ல் இந்திய பெண்கள் அணியினர் சாம்பியன் ஆகினர். 24 மணி நேரத்தில் இந்தியாவுக்கு மூன்று ஆசிய கோப்பை கிடைத்தன