90 ஏவுகணை
மாஸ்கோ: உக்ரைன் மீது அணு ஆயுதங்களை ஏந்தி செல்லக்கூடிய அதிநவீன, 'ஒரேஷ்னிக்' ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேல் போர் நடக்கிறது. பல்வேறு தரப்பிலிருந்து போர் நிறுத்த முயற்சி மேற்கொண்ட போதும் எதுவும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து, 90 ஏவுகணைகள், 700 ட்ரோன்களை பயன்படுத்தி நேற்று முன்தினம் ரஷ்யா மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில், புதிய நடுத்தர துார ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ஒரேஷ்னிக்கை ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டி உள்ளார்.

உக்ரைன் போரில் இந்த ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்துவது இது மூன்றாவது முறை. இத்தாக்குதலில், நான்கு பேர் உயிரிழந்தனர்; 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கீவ் நகரில் மட்டும், 40க்கும் மேற்பட்ட இடங்கள் சேதமடைந்தன.

ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்தியதற்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, அதன் வெளியுறவு கொள்கை தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில், ''ரஷ்யா போர்க்களத்தில் முன்னேறி செல்ல முடியாமல் ஒரு முட்டுக்கட்டையை சந்தித்துள்ளது.

' 'இதன் காரணமாகவே, உக்ரைன் நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி, மக்களை அச்சுறுத்தும் பயங்கரவாத போக்கை கையில் எடுத்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள், மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படும் பயங்கரவாத செயல்களாகும்,'' என்றார்.

ஒரேஷ்னிக் ஏவுகணையானது, வெடி பொருட்களை மட்டுமின்றி, அணு ஆயுதங்களையும் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கீவ் நகருக்கு வெடி பொருட்களை மட்டுமே இந்த ஏவுகணை சுமந்து சென்றதாக கூறப்படுகிறது.

• இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை போல 10 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது • விண்கல் விழுவதை போன்று அதிவேகமாக இலக்கை தாக்கக்கூடியது • தற்போதைய சூழலில், உலகில் உள்ள எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்பாலும் இந்த ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியாது • இந்த ஒரு ஏவுகணையை பயன்படுத்தி, 36 வெவ்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் துல்லியமாக தாக்கி அழிக்கலாம்.