📅 Thursday, 09 July 2026 IST | ஆனி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 27, 2026 10:31 PM

விளையாட்டு// வரும் 30ல் மாநில தடகள போட்டி சென்னை சார்பில் 200 பேர் பங்கேற்பு

Tamil Nadu

விளையாட்டு// வரும் 30ல் மாநில தடகள போட்டி சென்னை சார்பில் 200 பேர் பங்கேற்பு

Google News Tamil Sports

சென்னை: மாநில தடகள போட்டி வரும் 30ம் தேதி துவங்க உள்ள நிலையில், சென்னை சார்பில் 200க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனையர் போட்டியிட உள்ளனர்.

தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் நெல்லை தடகள சங்கம் சார்பில், மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வரும் 30ம் தேதி துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது.

இதில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனையர் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உட்பட பல்வேறு டிராக் போட்டிகளும், குண்டு எறிதல், தட்டு எறிதல் போன்ற பீல்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன.

இந்த போட்டிகளில், சென்னை மாவட்ட வீரர் – வீராங்கனையர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக, சென்னை மாவட்ட பயிற்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.