📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 11, 2026 03:34 PM

26 வயது பவுலரிடம் கிளீன் போல்ட் ஆன சுப்மன் கில்.. தெறித்து சிதறிய ஸ்டம்புகள்

26 வயது பவுலரிடம் கிளீன் போல்ட் ஆன சுப்மன் கில்..  தெறித்து சிதறிய ஸ்டம்புகள்

26 வயது பவுலரிடம் கிளீன் போல்ட் ஆன சுப்மன் கில்.. தெறித்து சிதறிய ஸ்டம்புகள்

லாகூர்: ஷேர்-இ-பஞ்சாப் டி20 லீக் 2026 தொடரின் 23-வது போட்டியில், பதிண்டா ராயல்ஸ் அணியின் 26 வயது வேகப்பந்து வீச்சாளர் சுமித் சர்மா, இந்திய அணியின் கேப்டனும், ஃபாசில்கா ஃபால்கன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

ஃபாசில்கா ஃபால்கன்ஸ் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் இந்த விக்கெட் வீழ்ந்தது. சுமித் வீசிய அவுட்சைட்-ஆஃப் லெந்த் பந்தை கில் லெக் சைடில் அடிக்க முயன்றார், ஆனால் பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு நேராக ஸ்டம்புகளைத் தாக்கியது. விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பந்துவீச்சாளர் சுமித் சர்மா உற்சாகமாகக் கொண்டாடினார்.

சுப்மன் கில் 7 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டுக்குப் பிறகு ஃபாசில்கா ஃபால்கன்ஸ் அணி 1.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்திருந்தது. இந்தத் தொடரின் முந்தைய இரண்டு போட்டிகளில் முறையே 21 பந்துகளில் 40 ரன்களும், 35 பந்துகளில் 67 ரன்களும் எடுத்திருந்த கில், நடப்பு தொடரில் முதல்முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட ஃபாசில்கா ஃபால்கன்ஸ் அணிக்கு ஆரம்பம் சாதகமாக அமையவில்லை. நட்சத்திர ஆட்டக்காரர் சுப்மன் கில் இரண்டாவது ஓவரிலேயே 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த விஹான் மல்ஹோத்ரா மற்றும் பிரான்ஷு பிரதாப் ஜோடி அதிரடி தாக்குதலைத் தொடுத்து, வெறும் 34 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து அசத்தினர்.

விஹான் மல்ஹோத்ரா 29 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 53 ரன்களும், பிரதாப் வெறும் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 64 ரன்களும் விளாசினர்.தொடர்ந்து வந்த கேப்டன் சன்வீர் சிங் ஒருபுறம் பொறுப்புடன் விளையாடி 26 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். மறுபுறம் பிரேரித் தத்தா , ஈஷ் ராவ் ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடிய கேப்டன் சன்வீர் சிங் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஃபாசில்கா ஃபால்கன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.பதிண்டா ராயல்ஸ் அணி தரப்பில் சுமித் சர்மா, லவ்பிரீத் கம்போஜ் மற்றும் கௌரவ் சௌத்ரி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை அடுத்து களமிறங்கிய பதிண்டா ராயல்ஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.