📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 23, 2026 09:00 PM

2025ம் ஆண்டின் சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்

2025ம் ஆண்டின் சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”தமிழ் மொழியின் வளத்தையும், அறிவுப் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் "சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தை" செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 01.01.2025 முதல் 31.12.2025 வரை தமிழில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட நூல்கள் மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம் சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை) , சிறுவர் இலக்கியம் , திறனாய்வு, .மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம், பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் , நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) , அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ், பயண இலக்கியம் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு, கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், பொறியியல், தொழில் நுட்பவியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல், சட்டவியல், அரசியல், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல், மருந்தியல், உடலியல், நலவியல், தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்), சமயம், ஆன்மிகம், அளவையியல், கல்வியியல், உளவியல், வேளாண்மையியல், கால்நடையியல், சுற்றுப்புறவியல், கணினியியல், நாட்டுப்புறவியல், வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம், இதழியல், தகவல் தொடர்பு, பிற சிறப்பு வெளியீடுகள், விளையாட்டு, மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் ஆகிய 33 வகைப்பாடுகளின் வழியாக பரிசுப் போட்டிக்காக வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்படும் நூலின் ஆசிரியருக்கு ரூ.50,000/-, அந்நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு ரூ.25,000/-என பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (tamilvalarchithurai@tn.gov.in) விலையேதுமின்றிப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கப்பெறலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.08.2026 ஆகும். மேலும் விவரங்களுக்கு: 044-28190412 / 28190413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.