📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 13, 2026 12:04 PM

2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1560 விலை சரிவு; இன்றைய நிலவரம் இதோ!

2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1560 விலை சரிவு; இன்றைய நிலவரம் இதோ!

சென்னை: சென்னையில் இன்று (அக் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 13,685 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 13 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், சவரன் 1 லட்சத்து 11 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (அக் 12) தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் சரிவடைந்து, 1 லட்சத்து 10 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில் இன்று (அக் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 13,685 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1560 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.