📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 31, 2026 07:30 AM

14 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை... வானிலை மையத்தின் அலெர்ட்

14 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை... வானிலை மையத்தின் அலெர்ட்

தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், 14 மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ முதல் 5.8 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

புதிய பாஸ்போர்ட் அறிமுகம் செய்வதில் தாமதம்: மலேசியா கொடுத்த அப்டேட்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 2-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

14 மாவட்டங்களில் கனமழை

தமிழகத்தில் இன்று (மே 30) திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், தருமபுரி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். மே 31 முதல் ஜூன் 2-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கக்கூடும்.