📅 Thursday, 09 July 2026 IST | ஆனி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 28, 2026 01:32 AM

விளையாட்டு// தேனி களத்தில் சென்னை வீரர்கள் மிரட்டல் 133 பதக்கங்கள் குவித்து ‘சாம்பியன்’ பட்டம்

Tamil Nadu

விளையாட்டு// தேனி களத்தில் சென்னை வீரர்கள் மிரட்டல் 133 பதக்கங்கள் குவித்து ‘சாம்பியன்’ பட்டம்

Google News Tamil Sports

சென்னை: தேனியில் நடந்த மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில், எதிரணிகளுக்கு, ‘நாக் அவுட் பஞ்ச்’ கொடுத்த சென்னை மாவட்ட அணி, 74 தங்கம் உட்பட மொத்தம் 133 பதக்கங்களை குவித்து, ஒட்டுமொத்த ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.

தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் இணைந்து, மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியை, தேனியில் நடத்தின.

சப் – ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர்ஸ் என, நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. பாயின்ட் பைட்டிங், லைட் கண்டாக்ட், கிக் லைட், புல் கண்டாக்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர்.

தமிழகம் முழுதும் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். இதில், சென்னையிலிருந்து மட்டும் 120 வீரர் – வீராங்கனையர் விளையாடினர்.

அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை மாவட்ட அணி 74 தங்கம், 26 வெள்ளி, 33 வெண்கலம் என, மொத்தம் 133 பதக்கங்களை அள்ளி, மற்ற மாவட்டங்களை மிரள வைத்தது. களம் முழுதும், சென்னை வீரர்களின் ஆதிக்கமே காணப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் 30 தங்கம், 13 வெள்ளி, 15 வெண்கலத்துடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. மதுரை மாவட்டம், 29 தங்கம், 27 வெள்ளி, 33 வெண்கலத்துடன் மூன்றாம் இடத்தை கைப்பற்றியது.

வேலுார், அரியலுார், திருவள்ளூர் அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.

மேலும், இந்த போட்டியில் தங்கம் வென்ற 280 வீரர் – வீராங்கனையர் இம்மாதம் 30 முதல் ஜூன் 3ம் தேதி வரை ஒடிஷாவில் நடக்கவுள்ள தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி சார்பாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என, கிக் பாக்சிங் மாநில சங்க செயலர் சுரேஷ் பாபு தெரிவித்தார்.