📅 Thursday, 09 July 2026 IST | ஆனி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 26, 2026 11:30 AM

ஜூலையில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி விண்ணப்பிப்பது?

ஜூலையில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி விண்ணப்பிப்பது?

ஜூலையில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி விண்ணப்பிப்பது?

சென்னை: தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு, இன்று (மே 26) முதல் மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் க.சசிகலா வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்கள் இதோ:

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த, வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்களாக எழுதியவர்களில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்குச் சென்று செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தனித்தேர்வர்கள் இதே காலகட்டத்தில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். சேவை மைய விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் கட்டாயமாக தங்களது ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

தேர்வுக் கட்டணம்

தேர்வுக் கட்டணமாக ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைப் பள்ளியில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் சேவை மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும்.

தட்கல் முறையில் விண்ணப்பிக்க

ஜூலையில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு மேற்கண்ட நாட்ளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) உரிய விண்ணப்பத் தொகையுடன் ஜூன் 9, 10 ஆகிய நாள்களில் பள்ளியில் அல்லது சேவை மையத்தில் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.