📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 04, 2026 10:05 AM

விஜய் அண்ணா கொஞ்சம் பார்த்துக்கோங்க.. சி.எம்மிடம் ஓபனாக சொன்ன கார்த்தி

விஜய் அண்ணா கொஞ்சம் பார்த்துக்கோங்க.. சி.எம்மிடம் ஓபனாக சொன்ன கார்த்தி

மதுரை: கார்த்தி நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சர்தார் 2 திரைப்படம் செப்டம்பர் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதனையொட்டி ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் மதுரைக்கு கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் சென்று ரசிகர்களை சந்தித்தார்கள். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய்யிடம் தான் வைத்த கோரிக்கை குறித்து பேசியிருக்கிறார்.

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த சர்தார் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. 100 கோடி ரூபாய் வசூலித்து செம கெத்து காண்பித்தது. இப்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனான், ஆஷிகா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தை வெற்றி படமாக கொடுத்தது போல் இதையும் டெலிவர் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் மித்ரனும், அவரது டீமும் கடுமையாக உழைத்திருக்கிறது.

நம்பிக்கையில் கார்த்தி: கார்த்திக்கும்கூட கடந்த மூன்று படங்களில் வணிக ரீதியான பெரிய வெற்றியை பார்க்கவில்லை. கண்டிப்பாக இந்தப் படம் தன்னுடைய ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும் என்றும்; இதில் நாங்கள் இறங்கி அடித்திருக்கிறோம் என்றும் நம்பிக்கை கொடுக்கும் வகையில்தான் பேசியிருக்கிறார். செப்டம்பர் பத்தாம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கும் சூழலில்; ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் சூடுபிடித்திருக்கின்றன.

மதுரையில் கார்த்தி: அந்தவகையில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, ஆஷிகா ஆகியோர் மதுரைக்கு சென்று கல்லூரி ஒன்றில் மாணவர்கள், மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார்கள். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, "திருச்செந்தூர்க்கு சென்று முருகனை தரிசித்துவிட்டு வந்தோம். அங்கிருந்து திருநெல்வேலிக்கு சென்று ரசிகர்களை சந்தித்தோம். இப்போது மதுரையில். பத்தாம் தேதி படம் ரிலீஸாவதால் ரசிகர்களுடன் பேச வந்தோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

சூர்யா எங்களுக்கு பலம்: மங்கையர்க்கரசி கல்லூரியில் ஸ்டூட்ன்ட்ஸ் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தார்கள். மதுரை எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்தான். இங்கிருந்துதான் என்னுடைய வாழ்க்கை ஆரம்பித்தது. சர்தார் 2 பெரிய படமாக வந்திருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா இருப்பது எங்களுக்கு பலம். பெரிய பட்ஜெட்டை போட்டிருக்கிறோம். சர்தார் ஒன்றில் எப்படி தண்ணீரை வைத்து படம் செய்தாரோ இதில் ஒரு விஷயத்தை தொட்டிருக்கிறார்.

மதுரையில் குறையே இருக்காது: நீண்ட நாட்கள் மெனெக்கெட்டு இந்தப் படத்தை செய்திருக்கிறார். நீங்கள் படம் பாருங்கள். நாம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இப்படத்தில் இருக்கிறது. அதேசமயம் அதிரடி ஆக்‌ஷன் படமாகவும் இருக்கிறது. ஆஷிகா, மாளவிகாவுக்கும் இதில் முக்கியமான பங்கு இருக்கிறது. மதுரையில் வரவேற்புக்கு குறையே இருக்காது.

விஜய்யிடம் சொன்னது: தமிழ் ராக்கர்ஸால் வரும் பிரச்னை என்னவென்பது முதலமைச்சர் விஜய்க்கு நன்றாகவே புரியும். சினிமாவில் நிறைய ஊழியர்கள் இருக்கிறார்கள். கலையை பாதுகாக்க வேண்டும். முதலமைச்சரை நேரில் பார்க்கும்போதுகூட, 'அண்ணா மற்றவர்களைவிட இந்தப் பிரச்னை என்னவென்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் அண்ணா. பார்த்துக்கொள்ளுங்கள்' என சொன்னேன். அவர் பார்த்துக்கொள்வார். நான் அரசியலுக்கு வரும் விருப்பம் இல்லை. ஹிட் கொடுத்தால் போதும்" என்றார்.