📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 03, 2026 06:04 PM

வார இறுதி நாளில் சரிந்தது தங்கம் விலை; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைவு

வார இறுதி நாளில் சரிந்தது தங்கம் விலை; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைவு

சென்னை: சென்னையில் இன்று (அக் 03) 22 காரரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13,675 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 01) ஆபரண தங்கம் கிராம், 13,680 ரூபாய்க்கும், சவரன், 1,09,440 ரூபாய்க்கும் விற்பனையானது.வெள்ளி கிராம், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று (அக் 02), தங்கம் விலை கிராமுக்கு, 95 ரூபாய் உயர்ந்து, 13,775 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 760 ரூபாய் அதிகரித்து, 1,10,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 245 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.45 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (அக் 03) 22 காரரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13,675 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிரத்யேக வீடியோ!

நகைப்பிரியர்களுக்கு நற்செய்தி; வார இறுதியில் சரிந்தது தங்கம் விலை; இன்றைய விலை நிலவரத்தை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்