📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 04, 2026 06:00 PM

“உண்மையை பேசினால் குற்றமா?”... சமந்தாவின் அதிரடியான பதிவு!

“உண்மையை பேசினால் குற்றமா?”... சமந்தாவின் அதிரடியான பதிவு!

“உண்மையை பேசினால் குற்றமா?”... சமந்தாவின் அதிரடியான பதிவு!

சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய நடிகை சமந்தா, பாலியல் தொழிலாளர்கள், தனித்தாய் மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான விமர்சனங்கள் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சமந்தா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறார்.

கடந்த 2025-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை, கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் சமந்தா திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக சமந்தா அறிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், குழந்தை பிறக்கும் வரை திரையுலகில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், குழந்தை பிறந்த பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் திரும்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சமூகத்தில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், “நாம் இன்னும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ள சமந்தா, சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பாலியல் தொழிலாளர்கள் விமர்சிக்கப்படும் நிலையில், அவர்களை நாடிச் செல்லும் வாடிக்கையாளர்கள் குறித்து பெரும்பாலும் யாரும் பேசுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தனியாக குழந்தையை வளர்க்கும் தாய்மார்களை விமர்சிக்கும் சமூகம், அவர்களைத் தனித்து விடும் பொறுப்பற்ற தந்தைகள் குறித்து பேசுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களையே விமர்சிக்கும் போக்கு இருப்பதாகவும், அந்தக் கொடுமையை செய்தவர்கள் குறித்து அதே அளவுக்கு கேள்விகள் எழுப்பப்படுவதில்லை என்றும் சமந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

“உண்மையைப் பேசுபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால், உண்மையை மூடி மறைப்பவர்கள் குறித்து பேசப்படுவதில்லை” என்றும் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சமந்தாவின் புகைப்படங்களை டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக அவர் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக, சமந்தாவை தவறாகச் சித்திரிக்கும் ஏஐ உருவாக்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு மும்பை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.

இந்தச் சூழலில், சமந்தா தற்போது வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு கவனம் பெற்றுள்ளது.