📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 18, 2026 11:33 AM

“உண்மையை ஏத்துக்குங்க.. ஷமி, புவனேஷ்வர் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது”

“உண்மையை ஏத்துக்குங்க.. ஷமி, புவனேஷ்வர் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது”

“உண்மையை ஏத்துக்குங்க.. ஷமி, புவனேஷ்வர் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது” - ஆகாஷ் சோப்ரா

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் மூத்த வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 2026 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்காக புவனேஷ்வர் குமார் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். மறுபுறம், 2025-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத முகமது ஷமி, உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து அபாரமாகப் பந்துவீசி வருகிறார். ஆனாலும் தேர்வுக்குழு இவர்களை கண்டுகொள்ளவில்லை.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற்ற முகமது ஷமி இந்திய அணி கோப்பை வெல்ல ஒரு காரணமாக இருந்தார். ஆனால், அதன்பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே போல, 2022க்கு பிறகு புவனேஸ்வர் குமாருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் அனுபவம் மிக்க இந்த இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களும் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர்கள் இருவருக்கும் தேர்வுக் குழு வாய்ப்பு வழங்கவில்லை.

இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். "ஷமி மற்றும் புவனேஷ்வர் குமாரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். டி20 அணியில் புவனேஷ்வர் குமாரையும், ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமியையும் சேர்த்திருக்கலாம். ஆனால் தேர்வுக்குழு அவர்களைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. ஆகிப் நபி, மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கிவிட்டது. எனவே இருவரும் இந்த எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்" என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதற்கிடையே, 2026 துலீப் டிராபி இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணியில் இடம் பெற்ற முகமது ஷமி, தனது 100-வது முதல்தரப் போட்டியை நிறைவு செய்தார். இந்த இறுதிப் போட்டியில் தெற்கு மண்டலத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 2012-ல் தனது 21-வது வயதில் கிழக்கு மண்டலம் சாம்பியன் பட்டம் வென்றபோது ஆடிய ஷமி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார்.