📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 14, 2026 10:04 AM

‘டீ’ ஓ.கே... ‘டீல்’ நோ!

‘டீ’ ஓ.கே... ‘டீல்’ நோ!

‘டீ’ ஓ.கே... ‘டீல்’ நோ! - ராகுலிடம் கைவிரித்த விஜய்!

டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணியின் பேரணிக்கு உங்கள் கட்சிப் பிரதிநிதிகளை அனுப்பிவையுங்கள். ‘எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறோம்’ என்பதை மட்டும் சொன்னால் போதாது.

எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் பெரும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒரு நாள் பயணமாக சென்னைக்கு வந்து சென்றார். முதல்வர் விஜய்யுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த அவரது சந்திப்பு, அவ்வளவு இனிப்பானதாக இல்லை என்கின்றன சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள். ராகுல் கேட்ட மூன்று விஷயங்களுக்கு முதல்வர் விஜய் ‘நோ’ சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. இருவரின் சந்திப்பில் என்ன நடந்தது?

“காங்கிரஸ் போராட்டத்தை ஆதரியுங்கள்...” - கோரிக்கை வைத்த ராகுல்!

அக்டோபர் 10-ம் தேதி, ‘மாணவர்களின் குரல்’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னைக்கு வந்த ராகுல் காந்தி, நேராக முதல்வர் விஜய்யின் நீலாங்கரை வீட்டுக்குச் சென்றார். வீட்டு வாசல் வரை வந்து ராகுலை வரவேற்ற முதல்வர், பனீர் டிக்கா, இறால் தொக்கு, ஹைதராபாத் மட்டன் கிரேவி, ரொட்டிகளுடன் மதிய உணவு கொடுத்து அசத்தியிருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் பேசிக்கொண்ட அரசியல்தான் கதர்களிடம் பேசுபொருளாகியிருக்கிறது.

நம்மிடம் பேசிய சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் சிலர், “இப்படியொரு சந்திப்புக்கு முதல்வர் விஜய் முதலில் நேரம் கொடுக்கவில்லை. ‘முதல்வரைப் பார்க்காமல் ராகுல் சென்றால், கூட்டணிக்குள் தேவையற்ற சலசலப்புகள் எழும்’ என எடுத்துச் சொல்லி, சந்திப்புக்கு ஓ.கே வாங்கியது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர்தான். விமான நிலையத்திலிருந்து புறப்படும்போதே, ராகுலின் கான்வாய் வாகனத்தில் ஏறத் தவறிவிட்டார் பிரவீன் சக்கரவர்த்தி. அதனால், சந்திப்பின்போது அவர் இல்லை.

இடைத்தேர்தல் வெற்றிக்காக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல், தமிழக அரசியல் சூழல் குறித்துக் கேட்டறிந்தார். டெல்லி போராட்டக்களம் நோக்கிப் பேச்சு திரும்பியது. ‘பா.ஜ.க-வுக்கு எதிராக எத்தனையோ போராட்டங்களைச் செய்திருக்கிறோம். அப்போதெல்லாம் உருவாகாத எழுச்சி, எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு போராட்டத்துக்கு எழுந்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க ஆட்டம் கண்டுபோயிருக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஞானேஷ் குமார் பதவி விலக இன்றுவரை நீங்கள் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. உங்களிடமிருந்து அப்படியோர் அழுத்தம் வருமென எதிர்பார்க்கிறேன்.

‘டீ’ குடிக்க ஓ.கே... ‘டீல்’-க்கு நோ... விஜய்யின் ‘திடுக்’ அரசியல்!

அறையில் எழுந்த அனலைத் தணிப்பதற்காக, ‘2029 நாடாளுமன்றத் தேர்தல்தான் நம்மோட இலக்கு. பா.ஜ.க-வை வீட்டுக்கு அனுப்புவதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்’ என்று மாணிக்கம் தாகூர் பேசி, அனைவரையும் கூல் செய்வதற்கு முயன்றார். அதற்கு மேல், அங்கே இருக்க ராகுலுக்கு விருப்பமில்லை. ராகுல் கிளம்ப எத்தனித்தபோது, ‘டீ சாப்பிட்டுவிட்டுப் போகலாமே...’ என்று முதல்வர் கேட்க, இருவரும் ‘பாஸ்க் பை காபி’ கடைக்குச் சென்றனர். ‘கூட்டணியில் மனக்கசப்பு ஏதுமில்லை’ என்பதைப் பொதுவெளியில் காட்ட, இந்த ‘டீ’ குடிக்கும் நிகழ்ச்சி நடந்ததே தவிர, ராகுல் கேட்ட விஷயங்களுக்கு ‘நோ’ சொல்லிவிட்டார் முதல்வர். ‘ஏன் வந்தோம்...’ என்ற அயர்ச்சிதான், இந்தச் சந்திப்பின் முடிவில் கதர்களுக்கு ஏற்பட்டது” என்று நொந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் கூறுகையில், “காங்கிரஸுடனான கூட்டணியை மதிக்கும் எண்ணம் த.வெ.க-வுக்கு இருப்பதாகத் தெரிய வில்லை. அரசு வழக்கறிஞர்கள் நியமனம், வாரியத் தலைவர் பதவிகள் என காங்கிரஸின் கோரிக்கைகள் எதற்குமே த.வெ.க மேலிடம் செவி சாய்ப்பதில்லை. இப்போது ராகுலே வாய்விட்டுக் கேட்டும்கூட, காங்கிரஸ் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மறுக்கிறார் முதல்வர் விஜய். கேட்டால், ‘எங்களுக்குத்தான் எம்.பி-க்கள் இல்லையே...’ என்று சால்ஜாப்பு சொல்கிறார்கள். த.வெ.க சீனியர் அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி, காங்கிரஸ் போராட்டத்துக்கு வலு சேர்ப்பதில் என்ன தயக்கம்... ‘விஜய் தளபதி’ என வடமாநில இன்ஃப்ளூயன்ஸர்களை வைத்து ரீல்ஸ் போடுபவர்கள், ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் அதேபோலப் பிரசாரம் செய்திருக்கலாமே! பா.ஜ.க-வை எதிர்த்துக் கொண்டு காங்கிரஸுக்கு ஆதரவாக நிற்க த.வெ.க தயங்குகிறது. இந்தத் தயக்கம் கூட்டணிக்கே உலை வைத்துவிடும்” என்று எச்சரித்தார்.

கதர்களின் எச்சரிக்கைகளைக் காதில் போட்டுக்கொள்ளும் மனநிலையில் முதல்வர் இல்லை. ‘இவர்கள் எங்கே போய்விடப் போகிறார்கள்...’ என்ற அலட்சியம்தான் காங்கிரஸ் மீது த.வெ.க-வினருக்கே இருக்கிறது. நாளுக்கு நாள் கூட்டணிக்குள்ளே சூடு அனல் பறக்கிறது. இதை தணிக்கும் எண்ணம் ஆட்சியாளர்களிடம் இல்லை!