📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 24, 2026 03:03 PM

‘துரோகியே வெளியில் போ‘... தலைதெறிக்க ஓடும் த.வெ.க. வேட்பாளர்கள் : முரசொலி தலையங்கம்!

‘துரோகியே வெளியில் போ‘... தலைதெறிக்க ஓடும் த.வெ.க. வேட்பாளர்கள் : முரசொலி தலையங்கம்!

முரசொலி தலையங்கம் (24.09.2026)

தலைதெறிக்க ஓடும் த.வெ.க. வேட்பாளர்கள்!

மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் விஜய் நிறுத்திய வேட்பாளர்களை பொதுமக்கள் விரட்டோ விரட்டு என்று விரட்டி அடிக்கிறார்கள். மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் தலைதெறிக்க ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இருவருமே அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள். அவர்களை தனது சுயநலத்துக்காக, குதிரை பேரம் நடத்தி அக்கட்சி உறுப்பினர்களில் இருந்து விலக வைத்தார் விஜய். அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகினார்கள். அந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. செய்யப்பட்ட பேரத்தின் அடிப்படையில் அவர்களையே வேட்பாளர்களாக அறிவித்தார் விஜய். இதுதான் அப்பட்டமான, பச்சையான குதிரை பேரம் என்பது. அதைச் செய்துவிட்டுத்தான் வெள்ளையும் சொள்ளையுமாக பட்டு வேட்டி சட்டையுடன் ஊரைச் சுற்றிக் கொண்டு இருக்கிறார் விஜய்.

ஆனால் அவரால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களால் ஊருக்குள் நடமாட முடியவில்லை. வோட்டுக் கேட்டுப் போகமுடியவில்லை. எங்கே போனாலும் பொதுமக்கள், வாக்காளப் பெருமக்கள் விரட்டுகிறார்கள். ஊடகங்களில் இந்தக் காட்சிகள் அதிகமாக வரத் தொடங்கி இருக்கின்றன.

‘துரோகியே வெளியில் போ' என்று மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலை யும், தாராபுரத்தில் சத்தியபாமாவையும் விரட்டுகிறார்கள் மக்கள்.

‘ஊருக்குள் வரத் தடை, துரோகி பட்டம், வேட்பாளர்கள் விரட்டி அடிப்பு, தடுமாறும் தாராபுரம், மல்லுக்கட்டும் மதுராந்தகம், கை கொடுக்குமா விஜய் பிரச்சாரம்?' என்று தலைப்பு போட்டு இக்காட்சிகளை விவரித்துள்ளது ‘குமுதம் ரிப்போர்ட்டர்' இதழ். ( 25.9.2829)

“கான்ஃபிடெண்டாக இருங்க என்று விஜய் சொன்னார். இப்போது அவரே சந்தேகத்துடன் தான் இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்கிறார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அந்த இரண்டு வேட்பாளர்களும் மை காய்வதற்கு முன் தங்- கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். மக்களை ஏமாற்றிச் சென்றவர்களே மீண்டும் ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு இருப்பதை தொகுதி மக்களே ரசிக்கவில்லை. த.வெ.க.வில் இருப்பவர்களும் மரகதம் குமாரவேல் நிறுத்தப்பட்டு இருப்பதை ஆதரிக்கவில்லை. வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கட்சி சாராத பொதுமக்களும் மரகதம் மீது கோபத்தில் இருக்கிறார்கள்.

“நாம் நம்பி இந்தம்மாவுக்கு வோட்டு போட்டா, இந்தம்மா நம்மளை முட்டாள்னு நினைச்சு விஜய் கட்சிக்கு போயிட்டாங்க. நாம் யாருன்னு இந்தம்மாவுக்கு உணர்த்தணும்' என்று ஊர் மக்களே கோபத்தை வெளிப்படுத்தி பேசத் தொடங்கி விட்டார்கள் என்று ‘குமுதம் ரிப்போர்ட்டர்' எழுதி இருக்கிறது.

“தாராபுரம் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் போது, 'துரோகி.. துரோகி ஒழிக' என்று பொதுமக்கள் கோஷம் போட்டனர். பல கிராமங்களில் வோட்டுக் கேட்கச் செல்லும் போது ஊருக்குள்ளேயே விடாமல், 'யாரைக் கேட்டு ராஜினாமா செய்தீர்கள்? மீண்டும் வோட்டுக் கேட்டு வந்துட்டீங்களா? இப்போ உங்களுக்கு வோட்டுப் போட்டா, மறுபடி ராஜினாமா செய்யமாட்டீங்கன்னு எப்படி நம்புறது?” என்று ஏகத்துக்கும் வாக்காளர்- கள் அவரை வறுத்தெடுக்கிறார்கள்” என்றும் எழுதி இருக்கிறது 'குமுதம் ரிப்போர்ட்டர்' இதழ்.