📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 25, 2026 10:03 PM

தனுஷ் பேசும்போது வடிவேலு போட்ட அலப்பறை.. இப்போவே ஆரமிச்சிட்டாரே ப்பா

தனுஷ் பேசும்போது வடிவேலு போட்ட அலப்பறை.. இப்போவே ஆரமிச்சிட்டாரே ப்பா

சென்னை: தனுஷை வைத்து தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்துக்கு D56 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். வடிவேலுவும் இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அப்போது தனுஷ் பேசுகையில் வடிவேலுவும் தன் பங்குக்கு செம அலப்பறையை போட்டுவிட்டார்.

தனுஷ் இப்போது தேசிய விருது வென்ற உற்சாகத்தில் இருக்கிறார். கேப்டன் மில்லர், ராயன் படங்களுக்காக சமீபத்தில்தான் அவர் விருதுகளை பெற்றார். அவர் லாபி செய்துதான் இந்த தேசிய விருதை பெற்றார் என்று பலரும் விமர்சித்தார்கள். விருதுக்கு தேர்ந்தெடுத்த நடன அமைப்பாளர் கலா மாஸ்டரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஆனால் தனுஷுக்கு விருது கொடுத்ததில் எந்தவிதமான அரசியலும் இல்லை என்பதை அவர் தெளிவுப்படுத்தினார்.

தனுஷின் விளக்கம்: தனுஷும் சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், '3, மயக்கம் என்ன, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களுக்கு எல்லாம் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அப்போது ஏன் விருது கொடுக்கவில்லை என்று யாருமே கேட்கவில்லை' என சைலெண்ட்டாக தரமான பதிலடியை கொடுத்திருந்தார். பிறகு சில நாட்களுக்கு முன்பு சென்று விருதையும் பெற்றுக்கொண்டார். அத்தனையும் தன் ரசிகர்களுக்காகத்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த படம்: அடுத்ததாக ஓம் படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அதனை முடித்துவிட்டு லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் D56 படத்தில் நடிக்கிறார். இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் பூஜை சிவகங்கை கிடா விருந்துடன் கோலாகலமாக நடைபெற்றது. அதில் வடிவேலு, ப்ரீத்தி முகுந்தன், சாய் அபயங்கர், தனுஷ், தமிழரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

தனுஷ் பேச்சு: அப்போது பேசிய தனுஷ், "ஓம் நமசிவாய.. இங்கே நான் அதிகம் பேசுவதாக இல்லை. விரைவில் ஓம் படத்தின் ஆடியோ லான்ச்சில் சந்திப்போம். இப்போது கிடா விருந்து இருக்கிறது. எல்லோரும் நல்லபடியாக சாப்பிட்டுவிட்டு பத்திரமாக வீடு சென்று சேருங்கள்" என கூறினார். தனுஷ் பேச தொடங்கியபோது அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் சத்தம் எழுப்பினார்கள்.

வடிவேலு செய்தது: அப்போது குறுக்கிட்ட வடிவேலு ரசிகர்களை நோக்கி, 'பேப்பர் குஷன் வெடிக்கும்போது வாயை திறக்காதீர்கள். எல்லாம் உள்ளே போயிடப்போகுது' என கூற; அருகில் இருந்த தனுஷும் சிரித்துவிட்டார். முன்னதாக பூஜையில் வடிவேலு பேசியபோது, "D56 படத்தின் மூலம் தனுஷூடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இத்தனை வருடங்களாக ஏன் இணைந்த் பணியாற்றவில்லை என்று நீங்கள் கேட்கலாம். எங்கள் ஃபீல்டில் இரண்டு பேரும் பிரிவதற்கு அத்தனை வேலைகளையும் பார்ப்பார்கள்.

தீப்பொறியை வைத்து கொளுத்திப்போடுவார்கள். எங்களுக்கு இடையே தீ பந்தத்தையே போட்டுவிட்டார்கள். இந்தப் படம் அரசியல் சார்ந்த படமாக இருக்காது. வித்தியாசமான படம். கதையை கேட்ட பிறகு பெருமையாகவும், ஆச்சரியமாகவும் உணர்ந்தேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்" என கூறியது குறிப்பிடத்தக்கது.